வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்... ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது: டாக்டர் சௌமிளா
உடலில் எலும்பு இணைப்புகளில் வீக்கம் இருப்பது மட்டுமல்லாமல், காலையில் எழுந்திரிக்கும்போது, கை மற்றும் கால்கள் விரைப்புத்தன்மையுடன் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும்.
உடலில் எலும்பு இணைப்புகளில் வீக்கம் இருப்பது மட்டுமல்லாமல், காலையில் எழுந்திரிக்கும்போது, கை மற்றும் கால்கள் விரைப்புத்தன்மையுடன் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து டாக்டவு சௌமிளா விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த பிரச்னை வராமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
Advertisment
முடக்குவாதம் என்பது ஆட்டோம்யூ டிசார்டர். நமது உடலில் இருக்கும் செல்கள், மற்ற செல்களை எதிராளி என நினைத்து அழிக்கும் நிலைக்கு தான் முடக்கு வாதம் என்று பெயர். இந்த நிகழ்வு நடக்கும்போது மூட்டு இணைப்புகளில் வீக்கம், ஆகி கப்புள் ஜாயின் பெயின் என்று சொல்வார்கள். இதில் மூட்டுவலி என்பது வேறு, முடக்குவாதம் என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
சொந்த செல்களையே எதிராளி செல்கள் என்று நினைத்து அழிக்கும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இப்படி இருக்கும்போது ரத்தம் சரியாக இல்லாத இடங்களில் வீக்கம் கொடுக்கும். இந்த பிரச்னை காரணமாக உடலில் சிறிய இணைப்பு முதல் பெரிய இணைப்பு வரை அனைத்து இடங்களிலும் வீக்கம் ஏற்படும்போது தான் அதனை முடக்கு வாதம் என்று சொல்வார்கள்.
உடலில் எலும்பு இணைப்புகளில் வீக்கம் இருப்பது மட்டுமல்லாமல், காலையில் எழுந்திரிக்கும்போது, கை மற்றும் கால்கள் விரைப்புத்தன்மையுடன் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும். சூரிய ஒளி அவர்கள் மீது படும்போது தான் கொஞ்சம் ரிலீஃப் ஆகும். உடலில் இருக்கும் வெப்பத்தை தாண்டி, வலி இருக்கும் இடங்களில் அதிகமான வெப்பம் இருக்கும் இதை வைத்தே அவர்களுக்கு முடக்கு வாதம் வர வாய்ப்பு இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.
Advertisment
Advertisements
தாங்க முடியாத வலி இருக்கும். எப்போதும் சோர்வாகவோ, காய்ச்சல் வந்தது போலவோ இருக்கும். வைட்டமின் டி குறைபாடு காரணமாக இது ஏற்படுகிறது. காலையில் சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்னை இருப்பவர்கள் செம்பருத்தி டீ குடிப்பது நல்லது. 2 சிவப்பு செம்பருத்தி, காயவைத்து அரைத்து பவுடர் செய்து, கொதிக்கும் தண்ணீரில் தேனுடன் சேர்த்து குடிக்கலாம்.
மற்றொன்று முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து ஜூஸ் மாதிரி செய்து, காயவைத்த செம்பருத்தியை, தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரில், முடக்கத்தான் கீரை, திப்பிலி, வால் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், முடக்குவாதம் வராது என்று கூறியுள்ளார்.