சுகர், பி.பி இல்ல... ஆனா திடீர் தலை சுற்றல், மயக்கம்: இன்ஸ்டன்ட் தீர்வு சொல்லும் டாக்டர்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம், வருவது வழக்கம். இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உடலில் சுகர், பி.பி என எந்த பாதிப்பும் இல்லாமல், அடிக்கடி தலை சுற்றல் வாந்தி, மயக்கம் வரும் பிரச்னை உங்களுக்கு இருந்தால் இந்த எளிமையான வழியை பயன்படுத்தலாம்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம், வருவது வழக்கம். இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உடலில் சுகர், பி.பி இருந்தால் தலை சுற்றல் வாந்தி மயக்கம் வருவது சாதாரணம் தான் என்றாலும், இதில் எதுவும் பாதிப்பு இல்லை என்றாலும், தலை சுற்றல் வாந்தி மயக்கம் வருவது வருவது இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் இருக்கும் பித்தம். உடலில் பித்ததத்தின் அளவு அதிகமானால் அது தலைக்கு ஏறி மயக்கம், வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தங்களுக்கான பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
சீரகத்தை எடுத்து வறுத்து மீண்டும் அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை கசாயமாக வடித்து எடுத்துக்கொண்டு அதில், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இப்படியே 7 நாட்கள் செய்து வந்தால், பித்தத்தின் நிலை சமநிலைக்கு வந்து தலை சுற்றல், வாந்தி, மயக்கம் நிற்கும்.