முந்திரி, பாதாமை விட அதிக இரும்புச் சத்து... எள்ளு, முளைக் கீரை நன்மையை தெரிஞ்சுக்கோங்க!
இரும்பு சத்து இருக்கும் உணவுகளை சொல்லுங்கள் என்று கேட்டால் பலரும் பேரிச்சம் பழத்தை தான் சொல்வார்கள். ஆனால் சொல்லிக்கொள்ளும் வகையில் அதிகமான இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் இல்லை
ஒரு மனிதனின் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு, இரும்புச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. தினமும் 19-29 மில்லிகராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதிகபட்சமாக பெண்களின் குழந்தை மகப்பேறு காலக்கட்டத்தில் இரும்புச்சத்து 40 மில்லிகிராம் தேவைப்படுகிறது. இந்த சத்து உடலில் குறையும்போது, உடல் எடை குறைவு, மூச்சு வாங்குதல், உடல் சோர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும்.
Advertisment
நாம் சாப்பிடும் உணவு பொருட்களில், இரும்புச்சத்து இருந்தாலும், அதை ரெகுலராக நாம் எடுத்துக்கொள்வதில்லை. அதே சமயம், நாம் இரும்பு சத்து நிறைந்த உணவைத்தான் சாப்பிடுகிறோமா என்பது பலருக்கும் தெரியாது. அதேபோல் இரும்பு சத்து இருக்கும் உணவுகளை சொல்லுங்கள் என்று கேட்டால் பலரும் பேரிச்சம் பழத்தை தான் சொல்வார்கள். ஆனால் சொல்லிக்கொள்ளும் வகையில் அதிகமான இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் இல்லை என்பது பலருக்கும் தெரியாது.
பேரிச்சம் பழத்தை விட, அதிகமான இரும்புச்சத்து நிறைந்த பல உணவுகள் உள்ளன. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து பாகத்திற்கு எடுத்து செல்வது ரத்த சிவப்பு அனுக்கள் தான். இந்த இரத்த சிவப்பு அனுக்கள் இயங்குவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் ஹீமோகுளோபின். இந்த ஹீமோகுளோபின் அளவு சரியாக இருப்பதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவைப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலக்கட்டத்தில் ரத்தப்போக்கு இருப்பதால், அவர்களுக்கு இரும்புச்சத்து முக்கிய தேவை.
சைவம் மற்றும் அசைவ உணவுகளில் நமக்கு தேவையாக இரும்புச்சத்துக்ள் இருந்தாலும், சைவ உணவுகளில், அதிகமான சத்துக்கள் இருக்கிறது. அதன்படி, முளைக்கீரை 100 கிராமில் 38 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது, அதேபோல், அறைக்கீரையில, 23 மில்லிகிராம், மனத்தக்காளி கீரை 20 மில்லிகிராம், மல்லி இலை, 18 மில்லி கிராம், புதினா 16 மில்லி கிராம், பருப்பு கீரை 15 மில்லி கிராம், இரும்புச்சத்து இருக்கிறது.
Advertisment
Advertisements
விதை வகைகளில் எள்ளு 100 கிராமில், 14.6 மில்லிகிராம், கசகசா விதையில், 9.76 மில்லி கிராம், பூசனி விதை 9 மில்லிகிராம், சியா விதை 7.72 மில்லி கிராம், ஆளி விதை 5.6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. உள்ளது. நட்ஸ்களை எடுத்துக்கொண்டால், முந்தியில், 6.8 மில்லிகிராம், பாதாம் 4.8 மில்லிகிராம், பிஸ்தா மற்றும் வேர்க்கடலை 3.92 மில்லிகிராம், வால்நெட் 2.91 மில்லிகிராம், ராஜ்மா 16.69 மில்லி கிராம், காராமணி 9.95 மில்லிகிராம், கருப்பு உளுந்து 7.57 மில்லிகிராம், மொச்சைக்கொட்டை, 7.51 மில்லிகிராம், பச்சை பயறு, 6.7 மில்லிகிராம், கொண்டைக்கடலை 4.31 மில்லிகிராம், இரும்புச்சத்து உள்ளது.
அதேபோல், 100 கிராம் சீரகத்தில், 66.4 மில்லிகிராம், மஞ்சள் தூள் 35 மில்லிகிராம், வெந்தையம் 33.5 மில்லிகிராம், சோம்பு 18.5 மில்லிகிராம், ஏலக்காய் 14 மில்லிகிராம், சோயா மீல் மேக்கர் 13.7 மில்லிகிராம், ராகி (கேழ்வரகு) 3.9 மில்லிகிராம், இரும்புச்சத்து உள்ளது. அதே சமயம், 100 கிராம் பேரிச்சம் பழத்தில் ஒரு மில்லிகிராம் இரும்புச்சத்து தான் இருக்கிறது. ஆனால் அதில், 66 கிராம் சுகர் கிடைக்கிறது. அதனால் இரும்புச்சத்து கிடைக்க சாப்பிடும் உணவு பட்டியல்களில் பேரிச்சம் பழத்திற்கு இடமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“