Tamil Health Update : தென்னிந்தியாவில் அதிகம் சாப்பிடும் உணவுகளில் முக்கியமானது இட்லி. அரசி மற்றும் உளுந்தம் மாவு இரண்டும் புளிக்கவைத்து தயார் செய்யப்படும் இந்த மாவில் இட்லி மட்டுமல்லாது பல உணவு பொருட்களை தயார் செய்யலாம். ஒரு முறை தயார் செய்த மாவைமாவை உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து 5 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இட்லி மாவு தயாரிப்பது :
1 கப் உளுத்தம் பருப்பு 3 கப் அரிசியை எடுத்து நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளவும். குறைந்தது 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் அனைத்து தண்ணீரையும் வடிகட்டி, உளுத்தம் பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது தேவைக்கேற்ப தண்ணீருடன் வடிகட்டிய அரிசியை மிருதுவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து மிகவும் கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்காமல் ஒரு பதமாக கலக்கி வைத்துக்கொள்ளவும். இந்த மாவை ஒரே இரவில் 8 மணி நேரம் புளிக்க விடவும்.
பணியாரம் ரெசிபி
பணியாரம் செய்ய ஒரு பாத்திரத்தில் சிறிது மாவை எடுத்துக் கொள்ளவும். மாவில் கொத்தமல்லி இலைகளுடன் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை சுவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
இறுதியாக மாவை நன்றாக கலந்து பணியாரம் அச்சுகளில் ஊற்றி கடாயை ஒரு மூடியால் மூடி, ஒரு பக்கத்திலிருந்து 5-6 நிமிடங்கள் கழித்து அப்பத்தை மறுபுறம் புரட்டி மேலும் 5-6 நிமிடங்கள் வைத்திருந்தால் சுவையாக பணியாரம் தயார்.
தோசை
தோசை செய்ய சிறிது மாவை எடுத்துக் கொள்ளவும். மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி மாவு பஞ்சு போல் இருக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். நான்-ஸ்டிக் தவாவை எடுத்து எண்ணெய் தடவவும். அதன்பிறகு மாவை ஊற்றி வட்ட வடிவில் பரப்பவும். ஒருபுறம் வெந்தவுடன் தோசையை மறுபுறம் திருப்பி வேகவைத்து, எடுத்தால் சுவையான தேசை தயார். தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் உடன் இதனை சேர்த்து சாப்பிடலாம்..
உத்தாப்பம்
உத்தபம் செய்ய சிறிது மாவை எடுக்கவும். நான்-ஸ்டிக் தவாவில் எண்ணெய் தடவி 2-3 டம்ளர் மாவை ஊற்றி சிறிது பரப்பவும். அதன்மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி வைக்கவும். இருபுறமும் தங்க பழுப்பு நிறம் வரும் வரை வேகவைத்து எடுத்தால் சுவையாக ஊத்தாப்பம் தயார். தேங்காய் சட்னி அல்லது வறுத்த தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இட்லி
இட்லி செய்ய சிறிது மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நெய் தடவிய இட்லி அச்சுகளில் மாவை ஊற்றி 10-12 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையாக இட்லி தயார். சமைத்தவுடன் சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.
அப்பம்
அப்பம் செய்ய மாவை கொஞ்சம் எடுக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும். ஒரு சிறிய நான்-ஸ்டிக் கடாயை அல்லது கடாயை எடுத்து சிறிது எண்ணெய் தடவவும். 1-2 லேடல் மாவை ஊற்றி, மிக மெல்லிய அடுக்காகப் பரப்பவும். அப்பம் மெல்லியதாக இருந்தால், அதன் சுவை நன்றாக இருக்கும். சமைத்தவுடன் உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“