இத மட்டும் தான் கட் பண்ணேன்... சட்டுன்னு 5 கிலோ குறைஞ்சுருச்சு: நடிகை மீரா வெயிட் லாஸ் டிப்ஸ்!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும்போது எவ்வளவு எடை என்று தெரியவில்லை. ஆனால் முடியும்போது 80 கிலோ இருந்தேன். ஆனால் இப்போது 91- கிலோவில் இருந்து 16-17 கிலோ வரை குறைத்திருக்கிறேன்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும்போது எவ்வளவு எடை என்று தெரியவில்லை. ஆனால் முடியும்போது 80 கிலோ இருந்தேன். ஆனால் இப்போது 91- கிலோவில் இருந்து 16-17 கிலோ வரை குறைத்திருக்கிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதன் காரணமாக பல நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளதால், உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில், மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
Advertisment
தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வது, குறிப்பாக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சி இல்லாதது அல்லது அன்றாட வாழ்வில் போதிய அசைவுகள் இல்லாதது அதேபோல் குடும்பத்தில் உடல் பருமன் இருக்கும் வரலாறு இருந்தால், உங்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் தூக்கமின்மை இருந்தால், அவை பசி உணர்வை அதிகரித்து, கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை நாடச் செய்யலாம். இதுவும் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.
உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க பல வழிகள் இருக்கிறது. அந்த வகையில் இயற்கை முறையில் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்து நடிகை மீரா கிருஷ்ணன் டிப்ஸ் கொடுத்துள்ளார். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும்போது எவ்வளவு எடை என்று தெரியவில்லை. ஆனால் முடியும்போது 80 கிலோ இருந்தேன். ஆனால் இப்போது 91- கிலோவில் இருந்து 16-17 கிலோ வரை குறைத்திருக்கிறேன்.
நடிப்புக்காக நான் உடல் எடையை குறைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நமக்கு இவ்வளவு எடை இருக்க கூடாது என்று எடையை குறைத்தேன். 3 மாதத்தில் உடல் எடையை குறைத்தேன். இதற்காக முதலில் சர்க்கரையை குறைத்தேன். பழங்கில் இருந்து கூட சர்க்கரை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஷூட்டிங் போகும்போது வெளியில் சாப்பிட வேண்டிய நிலை வரும் என்பதால் யாராவது ஒருவர் சமைத்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ரிபைண்ட் ஆயில் சுத்தமாக எடுத்துக்கொள்ள கூடாது.
Advertisment
Advertisements
ஜங் உணவுகளையும் தவிர்கக வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடனடியாக எடையை குறைக்க வேண்மும் என்றால், முதலில் சர்க்கரையை தான் குறைக்க வேண்டும். இப்படி செய்தால் 5 கிலோ வரை குறைக்கலாம் என்று மீரா கிருஷ்ணன் கூறியுள்ளார்.