இயற்கை வயாகரா ஜூஸ்... திருஷ்டிக்கு உடைக்கும் இந்தக் காய் போதும்; இப்படி ரெடி செய்து குடிங்க: டாக்டர் யோக வித்யா
உடலுறவு வைத்துக் கொள்வதற்கு ஆண்களைப் பொறுத்தவரை விறைப்புத்தன்மை மிக முக்கியம். இதற்காக சிலர் வயாகரா எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட பானத்தை குடிப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு விரைப்புத்தன்மையை பராமரிக்க முடியும்
உடலுறவு வைத்துக் கொள்வதற்கு ஆண்களைப் பொறுத்தவரை விறைப்புத்தன்மை மிக முக்கியம். இதற்காக சிலர் வயாகரா எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட பானத்தை குடிப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு விரைப்புத்தன்மையை பராமரிக்க முடியும்
தாம்பத்தியம் என்பதை விரும்பாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். இது அனைவருக்கும் பிடித்தமானது தான் என்றாலும் கூட சிலர் இதில் சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். தங்கள் இன்பம் பெறவும், தங்கள் துணையை திருப்திப்படுத்தவும், சரியாக செயல்பட முடியாதவர்கள் அல்லது, நீண்ட நேரம் செயல்பட வேண்டும் என் நினைப்பவர்கள் வயாகரா போன்ற செயற்யை பொருட்களை தேடி ஓடுகின்றனர். இந்த மாதிரி வயாகரா மாத்திரை பயன்படுத்துவது பின்னாளில் அதற்கு அடிமையாகும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
Advertisment
அதே சமயம், வயாகரா போன்று இயற்கையில் கிடைக்கும் பல பொருட்களை வைத்தே நாம், தாம்பத்தியத்தில் எல்லை இல்லா மகிழ்ச்சியை காணலாம் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார். உடலுறவு வைத்துக் கொள்வதற்கு ஆண்களைப் பொறுத்தவரை விறைப்புத்தன்மை மிக முக்கியம். இதற்காக சிலர் வயாகரா எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட பானத்தை குடிப்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு விரைப்புத்தன்மையை பராமரிக்க முடியும் இது தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான ஜூஸ் என்று மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.
அந்த வகையில், தர்பூசணி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தோலுடன் சேர்த்து அரைத்து சாறு தயாரிக்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் நீண்ட நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கும். இதன் மூலம் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும். அதேபோல், தினமும் வெண்பூசணியை இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம். வெண்பூசணிக்கு இயற்கையாகவே காமத்தை தூண்டும் சக்தி இருப்பதால், இது நீண்ட நேர உடலுறவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
Advertisment
Advertisements
மேலும், உடலுறவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பாலில் ஜாதிக்காய் பொடி மற்றும் கசகசா சேர்த்து அருந்தலாம். இந்த பொருட்களுக்கு காமத்தை தூண்டும் சக்தி இருப்பதாக மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். கூடுதலாக, இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை கெட்டியாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.தினமும் காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடிப்பதும் உடலுக்கு நல்லது. இது உடலின் சூட்டை தணித்து நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். அதன்படி, நீடித்த உடலுறவுக்கு இதுவும் உதவும். இந்த இயற்கையான பொருட்களை சரியான விதத்தில் உட்கொள்வதன் மூலம் உடலுறவு நேரத்தை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.