உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட ஒரு மடங்கு சுத்தமான ரத்தம் முக்கியம். ரத்தத்தில் நச்சு இருந்தால், உடல் சீராக இயங்குவதில் பாதிப்பு ஏற்படும். உடல் ரத்தத்தில் நச்சு தன்மை இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், அதற்கு உடலில் ஏற்படும் பல அறிகுறிகள் உள்ளன.
Advertisment
பெண்களுக்கு வெள்ளைப்படுத்தல், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில், ஈரப்பதம் இல்லாத நிலை, ஒற்றை தலைவலி, பேசும்போது கெட்ட வாடை வீசுவது, முடி கொட்டுவது இந்த அறிகுறிகள் இருந்தால், ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் ரத்தத்தில் யூரியா அதிகமாக இருந்தால், உடலில் அதிகமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.
ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரக பாதிப்பு,ஏற்படும். யூரிக் ஆசிட் அளவு அதிரிக்கும்போது காலில் கட்டை விரலில் ஒருவித வலி ஏற்படும். இதேபோல் சோடியம், பொட்டாசியம், குளோரைட் ஆகியவை அதிகமாகும்போது, உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். தோலில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கும் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை தான் காரணம். இதனால் உடல் ரத்தத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இயற்கை முறையில் ரத்தத்தை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்ளலாம்? உணவில் அதிகமாக புளி சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படும். உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டாலும், ரத்தத்தில் நச்சு ஏற்படும். இதை இயற்கையான முறையில், சரி செய்வதற்கும், ரத்தத்தில் நச்சு தன்மையை போக்குவதற்கும் நெல்லிக்காய் பெரிய அளவில் உதவி செய்யும். தினமும் 2 நெல்லிக்காய் இருந்தால், ரத்தத்தில் உள்ள நச்சை எளிதாக சுத்தப்படுத்தலாம்.
Advertisment
Advertisement
தினமும் 2 நெல்லிக்காய் எடுத்து அதில் வசம்பு சேர்த்து, அதில் இஞ்சி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் அறைத்து வடிகட்டாமல் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பெரிய நன்மை கிடைக்கும். நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் வருகிறது என்றால், இதில் கொஞ்சம் மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். தொடர்ந்து இப்படி குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்த நச்சுக்கள் நீங்கும்.