அவரைக் காயில் இந்த 2 வேதிப் பொருட்கள்; மாரடைப்பு, பக்க வாதத்தை தடுக்க இப்படி சாப்பிடுங்க: டாக்டர் மைதிலி
உடல் எடை எப்போதும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, பசி உணர்வை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.
உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள மற்றும் கீரை வகைகளில் அதற்கான மருத்துவங்கள் இருக்கிறது. அந்த வகையில், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அவரைக்காய் சாப்பிடுவதால், இதயத்திற்கு எந்த அளவிற்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து டாக்டர் மைதிலி தனது வீடியோவில் கூறியுள்ளார்.
Advertisment
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளில் முக்கியமானது அவரைக்காய். ஒரு சிறிய கப் சமைத்த அவரைக்காயில், ஒரு நாளைக்கு தேவையான 35 சதவீத நார்ச்சத்து நமக்கு கிடைத்துவிடுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்கு, தினமும் போதுமான அளவு நார்ச்சத்து தேவை. செரிமானம் தொடர்பான எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும். அதேபோல் சரிமான திறனை அதிகமாக்கும் வல்லமை கொண்டது அவரைக்காய்.
உடல் எடை எப்போதும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, பசி உணர்வை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகமாவதை தடுக்கும். இதன் காரணமாக உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறையும். நார்ச்சத்து மட்டும் இல்லாமல் இந்த அவரைக்காயில் உள்ள மற்ற சத்துக்கள், உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.
இதன் காரணமாக உடலில் எந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று பாதிப்பு வராமல் தடுக்கும். உடல் நலம் மட்டும் இல்லால் மன நல ஆரோக்கியத்திற்கும் அவரைக்காய் பயன்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் அவரைக்காய், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. அவரைக்காயில் இருக்கும் பொட்டாசியம் என்ற முக்கியமான ஊட்டச்சத்து, நமது உடலில், ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சரியாக அளவில் வைக்கும்.
Advertisment
Advertisement
உடலில் ரத்த அழுத்தம் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அவரைக்காய் சாப்பிட்டால் இதயத்திற்கு ரத்தம் போகக்கூடிய நரம்புகள் இறுக்கமாவதை தடுக்கும். இதனால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதால’, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அவரைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தயாமின் ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். இதன் காரணமாகவும் இதயம் மிகவும் ஆரோக்கியமாக செயல்படும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.