தமிழிசை சௌந்தர்ராஜன் காலையில் டீ காபி சாப்பிடுவது இல்லை என்று கூறுகிறார். அதற்கு பதிலாக அவர் சத்தான வேறொரு டிரிங்கை குடிப்பதாகவும் அது குறித்தும் கூறி இருக்கிறார் .
அவர் குடிக்கும் சத்தான அந்த டிரிங்கை எப்படி செய்வது என்று வீரன் வீடு யூடியூப் பக்கத்தில் செய்து காட்டிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம்
சுடுதண்ணீர்
தேன்
துளசி
செய்முறை
சுடு தண்ணீரை ஒரு டம்ளரில் உற்றி அதில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து பின்னர் துளசி இலைகளை சிறிது சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு குடிக்கலாம்.
காலையில் டீ காபி குடிக்காமல் இதனை குடிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. அதேபோல தினமும் காலையில் சுடுதண்ணீர் குடிப்பது நல்லது. தேன் நிறைய சத்துக்கள் உள்ளது எனவே இவற்றை தினசரி குடித்து வரலாம்.
காலையில் சக்தி தரும் பானம்/எலுமிச்சைத் தேநீர்/morning energy drink/lemon drink #shortsfeed #shorts
டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இதனை குடிக்கலாம். அதேபோல துளசி சேர்ப்பதால் சளி தொல்லையும் நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.