அனைத்து கீரைகளும் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், முருங்கைக்கீரையில் சத்துகள் மிக அதிகம். அந்த வகையில் முருங்கை கீரையை எவ்வாறு சுவையான சைடிஷாக மாற்றுவது என்று இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
எண்ணெய்
ஒன்றரை ஸ்பூன் கடுகு
அரை டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
2 டேபிள் ஸ்பூன் வரமல்லி
4 காய்ந்த மிளகாய்
5 பூண்டு
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
சிறிய அளவு புளி
முருங்கை கீரை
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை சூடுபடுத்தி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு, சீரகம், வரமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, அதனை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து 5 பூண்டு, நறுக்கிய தக்காளி, பெரிய வெங்காயம், புளி, முருங்கை கீரை சேர்த்து வதக்கி ஆற வைக்க வேண்டும். இவை ஆறியதும் முதலில் அரைத்த கலவையுடன் சேர்த்து, இவற்றையும் அரைக்க வேண்டும். அதன் பின்னர், மீண்டும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சிறிது பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரைத்து எடுத்த கலவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான முருங்கைகீரை சைடிஷ் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“