/indian-express-tamil/media/media_files/2025/06/04/4fwv7I8iuhfiOoLXza8m.jpg)
கோபல் சர்மா, 24 வயதான இந்தியப் பெண், தனது உடல் எடை குறைப்புப் பயணத்தின் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் அவர் பெரும் பிரபலமடைந்துள்ளார். ஆரம்பத்தில் 102 கிலோ எடையுடன் தனது பயணத்தைத் தொடங்கிய கோபல், வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு, முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது, அவரது எடை 62 கிலோவாகக் குறைந்துள்ளது. இங்கிலாந்தில் கல்வி பயின்று வரும் கோபல், ஒரு வீடியோவில், புதிய ஆடைகளை அணிந்துகொள்வது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் தன்னம்பிக்கைக் குறைவு காரணமாக இங்கிலாந்தில் நவீன ஆடைகளை அணியாமல் இந்திய ஆடைகளை மட்டுமே அணிந்து வந்த அவர், உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துள்ளார். இந்தப் பயணம் அவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவரது மன ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தி, தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.
கோபல் சர்மா தனது எடை குறைப்புப் பயணத்தின்போது பின்பற்றிய உணவுமுறையை இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
காலை உணவு:
5 முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் ஒரு ரொட்டி.
பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த யோகர்ட் (ஒரு கிண்ணம்).
அவல் (ஒரு கிண்ணம்) மற்றும் சிறிதளவு பன்னீர்.
மதிய உணவு:
100 கிராம் சிக்கனுடன் பச்சை காய்கறிகள்.
தயிருடன் கிச்சடி.
பன்னீர் புர்ஜியுடன் பச்சை காய்கறிகள்.
இரவு உணவு:
வறுத்த பன்னீருடன் பச்சை காய்கறிகள்.
100 கிராம் சிக்கன் மற்றும் சாலட்.
முட்டை புர்ஜி.
மேலும், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, இளநீர் அல்லது பிளாக் காபி அருந்துவார். மாலையில் கிரீன் டீயை வழக்கமாகக் குடிப்பார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.