கெட்ட கொழுப்பை அகற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும்… இந்த கீரை பற்றி தெரியுமா? டாக்டர் மைதிலி
நிறைய பேருக்கு தெரியாத ஆனால் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த தவசி கீரையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி டாக்டர் மைதிலி கூறுகிறார்.
நிறைய பேருக்கு தெரியாத ஆனால் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த தவசி கீரையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி டாக்டர் மைதிலி கூறுகிறார்.
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அகற்றி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் மேலும் ரத்தத்தை சுத்தமாக்குதல், கண் பார்வையை தெளிவாக்குதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய குணங்கள் கொண்ட தவசி கீரையை பற்றி டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது பொருட்களும் உள்ளன.
வைட்டமின் ஏ - கண் பார்வையை மேம்படுத்தி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
கால்சியம் - எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முதியோர்களின் எலும்பு தேய்வு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
Advertisment
Advertisements
இரும்புச்சத்து - ரத்த சோகை குணமாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும். அதுமட்டுமின்றி ரத்தத்தில் உள்ள டாக்சின்ஸ்களை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கும். தாய் பால் சுரப்பு அதிகரிக்கும்.
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராமல் தடுக்கும். இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
நார்ச்சத்து - மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். செரிமானம் சீராகும், குடல் பகுதி இயக்கம் சீராகும். உடல் எடை குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கும்.
அனைத்து விதமான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். மாதம் இரண்டு முறையாவது சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.