Advertisment

காலை டிஃபனுக்கு டேஸ்டி தேங்காய் தோசை: ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க!

super soft and fluffy coconut dosa recipe in tamil: இந்த தேங்காய் தோசை மற்ற தோசைகளை போல் இல்லாமல் மிகவும் மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thengai dosa recipe in tamil: how to make coconut dosa tamil

coconut dosa recipe in tamil

thengai dosa recipe in tamil: தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. இந்த வித்தியாசமான தோசைகளை தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது.

Advertisment

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வித்தியாசமான தோசையை முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த தேங்காய் தோசை தோசையை முயற்சிக்கலாம். இந்த தேங்காய் தோசை மற்ற தோசைகளை போல் இல்லாமல் மிகவும் மென்மையாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருக்கும். மேலும், தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்ட சுவை இருக்கும்.

publive-image

அந்த வகையில், மிகவும் சுலபமாக தயார் செய்யக்கூடிய இந்த தேங்காய் தோசைக்கான எளிய செய்முறை இங்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.

தேங்காய் தோசை தயார் செய்யத் தேவையான பொருட்கள்:-

உளுத்தம் பருப்பு - ½ கப்
பச்சை அரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
புழுங்கல் அரிசி - ¼ கப்
உப்பு - தேவையான அளவு

தேங்காய் தோசை சிம்பிள் செய்முறை:-

முதலில் புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக கழுவி ஊறவைக்கவும்.

2-3 மணி நேரம் கழித்து, இவை இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து பச்சை அரிசி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் அவற்றையும் முன்னர் அரசி மாவு சேர்த்துள்ள அதே பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது இவற்றை ஒரு கரண்டியால் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பிறகு அவற்றை ஒரு மூடியால் மூடி சுமார் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தனியாக வைத்து விடவும்.

அதன்பின்னர், மாவை எடுத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது வழக்கம் போல் தோசை கல்லை சூடேற்றி மாவை ஊற்றவும்.

பிறகு அதன் மேற்பரப்பில் நெய் ஊற்றி பிரட்டி எடுத்தால், சூப்பரான தேங்காய் தோசை ரெடி.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment