நீங்கள் சோம்பலாகவும் சோர்வாகவும் உணர்ந்தால், அது உங்கள் மோசமான வளர்சிதை மாற்ற விகிதத்தை குறிக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதோடு, உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கும் 3 பாணங்களை இங்கே தருகிறோம்.
ஒரு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் பெரிய அளவில் கொழுப்பை எரிப்பதற்கு நேரடியாக உதவுகிறது. இந்த பானங்கள் கூடுதலாக கொழுப்பை கரைக்க உங்களுக்கு உதவக்கூடும். இப்போதே அந்த பாணங்கள் என்னென்ன பாணங்கள் என்று தெரிந்துகொண்டு தொடங்குங்கள்.
ஆப்பிள் சைடர் வினிகர்
இந்த பாணத்திற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் இந்த பாணத்தைக் குடியுங்கள். இந்த ட்ரிங்ஸ் உங்கள் குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இது உங்கள் பி.எச் அளவையும், உங்கள் வயிற்றின் அமில நிலையையும் பராமரிக்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தொப்பை மற்றும் ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கருப்பு காபி
“கருப்பு காபி உங்களுக்கு ஒரு செயற்கையான ஆற்றலைத் தருகிறது. மேலும், அட்ரீனல் சுரப்பியின் வேகம் காரணமாக, அது சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. எனவே, கருப்பு காபி பெரும்பாலும் உடற்பயிற்சிக்கு முந்தைய பானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இடைப்பட்ட உண்ணாவிரதத்தின்போது கெட்டோ உணவுகளின்போது இது பயன்படுத்தப்படுகிறது. அங்கு நீங்கள் உங்கள் உடலில் உள்ள மேக்ரோநியூட்ரியன்களின் எண்ணிக்கையை குறைக்கிறீர்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் கருப்பு காபியை உட்கொள்ளலாம். இதனால், உங்களுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். உங்கள் பயிற்சியில் உங்கள் திறனைக் குறைக்காமல் நீங்கள் நன்றாகப் பயிற்சி செய்யலாம். இது அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்கிறது,” என்று விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், செலிபிரிட்டி ஃபிட்னஸ் பயிற்சியாளர் பிரையன் டிசோசா கூறுகிறார்.
கிரீன் டீ
கிரீன் டீ உணவுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது உங்களுக்கு ஆற்றலைத் தராது, ஆனால், மக்கள் தங்கள் உணவுக்குப் பிறகு கிரீன் டீயை குடிக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களால் காபி சாப்பிட முடியாது. ஏனென்றால், காஃபின் விழித்திருக்க வைக்கும். ஆனால் கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான ஆதாரமாக மட்டுமே செயல்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் உண்ணும் உணவு வேகமாக ஜீரணமாகிறது. கிரீன் டீ உணவுக்கு மாற்றாக அல்லது சிற்றுண்டிக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, மாலையில் நீங்கள் சோர்வாக உணர்ந்தால், உங்கள் பயிற்சியாளர் அல்லது உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் உங்களுக்கு எந்த வகையான உணவையும் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"