நீரிழிவு நோயாளிகள் எப்படி இட்லி சாப்பிட வேண்டும். அதற்கு என்ன மாதிரியான சாம்பார் சட்னி வைத்து சாப்பிட வேண்டும் என்று உணர்வியல் நிபுணர் தாரிணி டாக்டர் விகடன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
நிறைய பேருக்கு இட்லிக்கு எந்த சட்டினி சாப்பிடலாம்? எந்த மாதிரி சாம்பார் வைத்து சாப்பிடலாம் என்றெல்லாம் குழப்பம் இருக்கும். கடைகளில் சாப்பிட்டால் கலர் கலராக வகை வகையான சட்னி, ஒரு கப் சாம்பார் அதுமட்டுமல்லாமல் பொடி, எண்ணெய் என நிறைய வாங்கி சாப்பிடுவோம் ஆனால் அதெல்லாம் தேவையே இல்லை என்று உணவியல் நிபுணர் தாரிணி கூறுகிறார்.
வீட்டில் சாம்பார் சட்னி தொட்டு சாப்பிடுவது ஆரோக்கியமானது. நிறைய சட்னி வைத்து சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்று அர்த்தம் இல்லை. நீரிழிவு நோயாளிகளும் இதையே பின்பற்றலாம். அதுவும் முதலில் சாம்பாரை தனியாக சாப்பிட்டுவிட்டு பின்னர் மீண்டும் சாம்பார் ஊற்றி இட்லியில் தொட்டு சாப்பிடுவது இன்னும் நல்லது என்று அவர் கூறுகிறார்.
செய்யும் இட்லியை சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசி வகைகள் கொண்டு இன்னும் சத்தாக செய்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளார். பின்னர் மற்றவர்கள் எல்லாரும் எப்போதும் போல இட்லி சாம்பார்,சட்னி வைத்து சாப்பிடலாம் என்கிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.