விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் சொன்ன ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். அதனை சக்கர சாதமும் வடகறியும் யூடியூப் சேனலில் செய்து காட்டிருப்பது போல நாமும் ட்ரை பண்ணலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
பூண்டு
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
பாகற்காய்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
புளி
நாட்டுச்சக்கரை
செய்முறை
முதலில் பாகற்காயை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். புளியையும் கெட்டியாக கரைத்து வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு, பூண்டு, கருவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் இரண்டாக நறுக்கி பொட்டு வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கி விடவும்.அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் பாவக்கா தொக்கு
ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதில் சிறிது நாட்டுச்சக்கரை சேர்த்து வேகவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கி சுடுசாதத்திற்கு வைத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். இதனை லஞ்ச் பாக்ஸ் சாதம் மாதிரி கிளறியும் கொடுக்கலாம்.
நாட்டுச்சர்க்கரை சேர்ப்பதால் கசப்பு அதிகமாக தெரியாது. இந்த முறையில் செய்தால் வெங்காயம் தக்காளி எதுவுமே தேவையில்லை. எண்ணெயில் வதக்கிய சுடு சாதத்திற்கு ஏற்ற ஒரு பாகற்காய் தொக்கு இனி இப்படி செய்யலாம்.