இட்லி, தோசைக்கு புதுவிதமாக என்ன சட்னி செய்வது என்று தெரியாமல் குழம்பி இருப்பவர்கள் கட்டாயம் இந்த ரெஸிபியை செய்து பாருங்கள். இதற்கு தக்காளி மற்றும் புதினா தேவை. இரண்டையும் வைத்து எப்போதும் இல்லாதது போல ஒரு சட்னியை தயார் செய்யலாம். தக்காளி புதினா சட்னி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
சிவப்பு மிளகாய்
துருவிய தேங்காய்
வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு
புளி
தக்காளி
கல் உப்பு
புதினா இலை
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
கடுகு
சீரகம்
சிவப்பு மிளகாய்
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
செய்முறை
oru கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் பூண்டு மற்றும் புளி சேர்க்கவும். பின்னர் அதில் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு கல் உப்பு சேர்த்து கலக்கவும்.
புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்து, அதை ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும். ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த கடலை பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
தக்காளி புதினா சட்னி | Tomato Mint Chutney Recipe In Tamil | Side Dish For Idly & Dosa
பின் வெங்காயம், தக்காளி, புதினா கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். முடிந்ததும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சட்னியை தாளிக்க தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், சிறிது பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இதை சட்னியில் சேர்த்து கலக்கவும்.
அவ்வளவுதான், சுவையான தக்காளி புதினா சட்னி ரெடி. சூடான இட்லி அல்லது தோசைகளுடன் பரிமாற தயாராக உள்ளது.