பருப்பு இல்லாமல் சாம்பாரா பட்டை இல்லாமல் பிரியாணியா என்பதற்குப் போல அந்த பட்டையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று சித்த மருத்துவர் சிவராமன் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.
இந்திய உணவுகளில் பெரும்பாலும் நாம் மசாலாக்கள் நிறைய சேர்ப்பதில்லை. ஆனால் வட இந்திய உணவுகளான பிரியாணி, புலாவ், குருமா போன்றவற்றில் சேர்க்கும் லவங்கப்பட்டையால் நம் உடலில் ஏற்படும் வாழ்வியல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
வாசனைக்காக சேர்க்கப்படும் லவங்கப்பட்டை நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது. பொதுவாகவே மணமூட்டிகளில் நிறைய ஜீரண சக்தியை கொடுக்கும் தன்மை உண்டு. அதிலும் இந்த லவங்கப்பட்டை ஜீரண சக்தியை அதிகரிக்கும். எண்ணெய், காய்கறிகள், புலாவ் போன்ற உணவுகள் ஜீரணம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதாலேயே அது போன்ற உணவுகளில் லவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.
ஜீரண சக்தியை தூண்ட, வயிற்றில் வாய்வு தங்க விடாமல் வெளியேற்ற, ஆரம்பகட்ட நீரிழிவு நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு அதிகமாக உள்ளது. மேலும் இது இளம் தலைமுறையினருக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டையை அன்றாடம் தேநீர் சேர்த்துக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய் பிரச்சனை குணமாகும் என பல ஆய்வுகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். அன்றாட இது மாதிரி லவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.
லவங்கப்பட்டையை குருமா, பிரியாணி போன்ற உணவு வகைகள் மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை கூடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல் போன்ற பிரச்சனைகளையும் லவங்க பட்டை வராமல் தடுக்கும். லவங்கப்பட்டை சீனா, துருக்கி ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வயிற்றில் வரக்கூடிய அல்சரை குணப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்கள், நீண்ட நாள் குடல் புண் அவதி, அஜீரண கோளாறு, வாய்வுத்தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கும் இந்த லவங்கபட்டை உதவியாக இருக்கும். இதனை லவங்கப்பட்டையை சற்று உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இது மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உணவுப்பொருள் கெடாமல் இருப்பதற்கு இந்த லவங்கப்பட்டை எண்ணெய் பயன்படுகிறது. இதன்மூலம் நிறைய பூஞ்சை தொற்றுகளையும் குணப்படுத்தலாம். மேலும் பூஞ்சை தொற்றுகள் வராமலும் தடுக்க முடியும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்கள் கூட லவங்கப்பட்டையை உணவில் ஒரு பங்காங்க சேர்த்து கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது போன்ற பிரச்சனைகளுக்கு தாங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் சேர்த்து இந்த லவங்கப்பட்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் மருந்துக்கு பயனுடையதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“