நல்லெண்ணெய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் ஆறுமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். உண்மையிலேயே அல்சரை நல்லெண்ணெய் குணப்படுத்துமா என்று மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
எண்ணெயிலேயே சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய் தான். ஏனெனில் இதில் வைட்டமின் b6, இ, ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்களான தாது உப்புக்கள், இரும்பு, சிங், மெக்னீசியம், செம்பு, கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளது.
மேலும் நல்லெண்ணெயில் செஸ்ஸாமின் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. அந்த தேதி பொருள் நல்ல எண்ணையோட வாசனைக்கும் நிறத்துக்கும் காரணம். இன்றைக்கு ஆலிவ் ஆயில் இறக்குமதி செய்கிறார்கள் ஆனால் நல்லெண்ணெய் இருக்கும் போது ஆலிவ் எண்ணைக்கு வேலையே கிடையாது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
நல்லெண்ணெய் அதன் மருத்துவ குணங்களுக்கு ஏற்ப வயிற்றுப்புண்ணையும் ஆற்றும். ஆனால் பத்து மில்லி லிட்டர் தான் என்னை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த எண்ணெயாக இருந்தாலும் அவ்வளவுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
ரத்த கொதிப்பு இல்லாதவர்கள் 15 முதல் 20 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பு உள்ளவர்கள் ஐந்து மிலிக்கு மேல் எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.