துவையல் ஒண்ணு; பலன் 10... மதிய உணவுடன் நெய் சேர்த்து; இப்படி சாப்பிடுங்க போதும்: டாக்டர் கௌதமன்

பிரண்டையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதில் துவையல் செய்து சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரண்டையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இதில் துவையல் செய்து சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pirandai Gowthaman

பிரண்டையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பல்வேறு தகவல்களை நம்ம டாக்டர் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

Advertisment

பிரண்டை எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம், முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பிரண்டை செரிமானத்தை சீராக்கவும், வாயு தொல்லையை குறைக்கவும், பசியை அதிகரிக்கவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. 

இது ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் பித்தப்பைக் கற்கள் உருவாவதை தடுக்கிறது. பெருங்குடல் பிரச்சனைளை தீர்க்க பிரண்டை உதவுகிறது மற்றும் உடல் மற்றும் மன சோர்வை குறைக்கிறது. பிரண்டையின் அரிப்புத் தன்மையை குறைக்க, புளி, உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, வெயிலில் உலர்த்த வேண்டும் என்று மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார்.

இதற்காக பிரண்டையை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரண்டை துவையலை நெய் மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். 

Advertisment
Advertisements

மேலும், பிரண்டையை எரித்து சாம்பலாக்கி, நீரில் கரைத்து, பின்னர் நீரை வடிகட்டி ஒரு உப்பு தயாரிக்கப்படுகிறது. இது எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் பயன்படுத்தப்படுகிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். எனினும், இதனை மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: