பி.பி-ஐ சீராக்க இந்த நட்ஸ்... 60 வயதை கடந்த பிறகு உங்க ஸ்னாக்ஸ் இதுதான்: டாக்டர் ராஜலட்சுமி
இவை அனைத்தும் முதியோரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார். இது குறித்த மேலும் பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் முதியோரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார். இது குறித்த மேலும் பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
வயதான காலத்தில் உடல் நலம் பேணுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது முதுமையில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். அந்த வகையில், பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா மற்றும் பிரேசில் விதைகள் ஆகியவை முதியோர்களுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. இது குறித்து டிரேடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் ராஜலட்சுமி விவரித்துள்ளார்.
Advertisment
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. மேலும், இதில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் கால்சியத்தை எலும்புகளுக்கு கொண்டு சேர்க்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க நார்ச்சத்து பயன்படுகிறது. இதற்காக, தினமும் 15 முதல் 20 பாதாம் வரை சாப்பிடலாம். இவற்றை ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த வால்நட்ஸ் உதவுகிறது. இது, மெலடோனின் அளவை அதிகரித்து தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது. தினமும் பாதியாக உடைக்கப்பட்ட 7 முதல் 9 வால்நட்ஸ் வரை வால்நட்ஸ் சாப்பிடலாம்
பிஸ்தாவில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது தவிர லுடீன் மற்றும் ஜியாக்சாந்தைன் போன்ற சத்துக்கள், மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சனைகளை தடுக்கிறது. தினமும் 35 முதல் 40 பிஸ்தா வரை சாப்பிடலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
Advertisment
Advertisements
பிரேசில் நட்ஸில் செலினியம் சத்து நிறைந்துள்ளது. இது தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம். இவை அனைத்தும் முதியோரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.