/indian-express-tamil/media/media_files/2025/03/04/qaK6D62cWcsuFEkCEgjt.jpg)
வரகரிசி உப்மா
காலையில் ஈஸியாக ஒரு டிபன் செய்யனும் அதுவும் சத்தாக செய்ய வேண்டுமா? அப்போ வரகரிசி வைத்து உப்மா செய்து கொடுங்கள். ஈஸியாக சத்தான வரகரிசி உப்மா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். வரகரிசி உப்மா செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
வரகரிசி
நெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
கேரட்
பீன்ஸ்
உப்பு
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில் வரகரிசியை எடுத்து இரண்டு முறை நன்கு கழுவி, அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை எடுத்து அதில் நெய், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு சேர்க்கவும்.
பிரேக்பாஸ்ட் காம்போ | Healthy Breakfast Combo Recipes | Varagu Arisi Upma | Coconut Peanut Chutney
இப்போது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஊறவைத்த வரகரிசியை சேர்த்து ஒரு முறை கலந்து, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவைக்கவும்.
ஒரு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து அழுத்தம் குறையும் வரை பத்து நிமிடம் தனியாக வைத்து இறக்கி மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் மிகவும் சுவையான வரகரிசி உப்மா தயாராகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.