குழந்தைகளுக்கு பெரும்பாலும் மில்லட்ஸ் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது சிரமம் தான். ஆனால் அதை செய்து கொடுப்பதற்கும் முறை உண்டு. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தாலே போதும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
அப்படி குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிட ஒருமுறை வரகு ஆப்பம் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வரகு - 2 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு
பழைய சாதம்
தேங்காய்
பஞ்சு போல ஆப்பம் வரகு அரிசில, மிக்ஸிலயே ஈஸியா ரெடி பண்ணிடலாம் // Millet recipes
செய்முறை
இரண்டு கப் அளவிற்கு வரகு அரிசி,அரை கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் அனைத்தையும் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதன் தண்ணியை வடித்து ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு மிக்ஸி ஜாலில் இதை சேர்த்து அரைக்க வேண்டும்.
அதனுடன் சிறிது தேங்காய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதனை அரைக்க ஊறவைத்த தனியே பயன்படுத்தலாம்.
பின்னர் அதில் மீதியான சாதத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவு புளிக்க ஒரு 8 மணி நேரம் அப்படியே விடவும்.
மாவு புளிச்சு தயார் ஆனதும் அதை நன்கு மிக்ஸ் செய்து ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் இந்த மாவை விட்டு ஆப்பம் செய்யலாம்.
குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும்போது அந்த ஆப்பத்தில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“