நரம்பு சுருள் நோய், நவீன வாழ்க்கை முறையில் பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. இது பெரும்பாலும் கால்களில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் ஒரு கோளாறாகும்.
Advertisment
இடுப்புக்குக் கீழ் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைபடும்போது இந்த நிலை ஏற்படுகிறது. கால்கள் நம் உடலின் இரண்டாவது இதயம் போல செயல்படுகின்றன. குறிப்பாக கால் தசைகள், ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை ஈர்ப்பு விசைக்கு எதிராக நரம்புகள் வழியாக மேல்நோக்கித் தள்ளி இதயத்திற்கு அனுப்புகின்றன.
இந்த செயல்பாட்டில் தடை ஏற்படும்போது, கால்களில் அதிகப்படியான இரத்தம் தேங்கி, நரம்புகள் புடைத்து, சுருண்டு கொள்கின்றன. இதுவே நரம்பு சுருள் நோய் எனப்படுகிறது. ரத்த சுத்தி சூரணம் (Ratha Suthi Suranam): இந்த மருந்தை அரை ஸ்பூன் வெந்நீரில் கலந்து, உணவுக்குப் பிறகு தினமும் இருமுறை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கலாம் என்று டாக்டர் நித்யா ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இது கீல்வாதம் தொடர்பான நரம்பு சுருள் நோய்க்கும் உதவக்கூடும்.
நரம்பு சுருள் நோயின் முதல் அறிகுறி தென்பட்டவுடன், கால் தசைகளை வலுப்படுத்தி, அவற்றை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.