உடலுக்கு சத்தான அனைத்து வகையான காய்கறிகளையும் வைத்து சுவையான காய்கறி கலவை கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த கூட்டு காலை வேளையில் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். மதியம் சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்
உருளை கிழங்கு
பீன்ஸ்
காலிஃபிளவர்
பச்சை பட்டாணி
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய்
சாம்பார் வெங்காயம்
செய்முறை
கூட்டு வைக்க தேவையான காய்கறிகளை எடுத்து நன்கு கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம், அரிசி மாவு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து மூடி பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.
காய்கறிகள், தேங்காய் விழுதுடன் சேர்ந்து வெந்து நல்ல வாசனையுடன் தயாராகிவிடும். பின்னர் இதனை தாளிக்க எண்ணையில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்து சுடு சாதத்துடன் சாப்பிடலாம்.