ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு கொள்ளு எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கார்ஹ்த்திகேயன் கூறுகிறார். அதுபற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
புரதம் நிறைந்த கொள்ளு மற்றும் கருப்பு உளுத்தம் பருப்பை பயன்படுத்தி தோசையை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி மருத்துவர் கூறுகிறார்.
தோசையின் புரத உள்ளடக்கத்தை அதிகரிக்க பல்வேறு பருப்பு வகைகளைப் பயன்படுத்தி புரோட்டீன் தோசை செய்யலாம். இந்த மாதிரி தோசையை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் குறைக்கும் என்பது உறுதி என மருத்துவர் கூறுகிறார்.
தோசையில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் மற்றும் கூடுதல் சர்க்கரைகள் அல்லது நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. இதன் முக்கிய மூலப்பொருட்கள் அரிசி மற்றும் உளுந்து என்பதால், இது புரதத்தின் நல்ல மூலமாகும்.
எண்ணெய் இல்லாமல் செய்யப்படும் தோசை சுமார் 112 கலோரிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 84% கார்போஹைட்ரேட் மற்றும் 16% புரதம். நொதித்தல் செயல்முறை வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1/2 கப் 250 கிராம்
கொள்ளு - 1/4 கப் 125 கிராம்
கருப்பு உளுத்தம் பருப்பு -1/2 கப் 250 கிராம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்
உப்பு
செய்முறை
இட்லி அரிசி, கொள்ளு, கருப்பு உளுத்தம் பருப்பு மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து கழுவி காய்ந்த மிளகாய் சேர்த்து ஊறவைக்கவும். பின்னர் இவற்றை எடுத்து அரைத்து எப்போதும் போல தோசை ஊற்றி சாப்பிடலாம்.
ப்ரொட்டீன் கருப்பு உளுந்து கொள்ளு தோசை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா !!? || 9 health benefits dosa
இந்த தோசை உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை வாரம் 2 முறை சாப்பிட்டு வர உடல் எடை குறைவதை காணலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.