உடல் எடை குறைய வேண்டுமா? நீங்கள் தினசரி உடற்பயிற்சியோடு சேர்த்து இந்த உணவு பழக்கத்தையும் ஃபாளோ பண்ணுங்க...
குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் எடை இளைப்பது எளிது. குடல் ஆரோக்கியம் இல்லை என்றால் உடல் எவ்வளவு எஃபோர்ட் போட்டாலும் வெயிட் லாஸ் பண்ண முடியாது. குடல் ஆரோக்கியமா இருந்தாதான் நம்ம உண்ணக்கூடிய உணவு சரியான முறையில் செரிமானம் ஆகும்.
குடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் உடல் வீக்கங்கள் இல்லாமல் இருக்கும். அந்த வீக்கங்கள் இல்லாமல் இருந்தால் மட்டும்தான் நம் உடலில் சுரக்கக்கூடிய நொதிகள், ஹார்மோன்கள் முறையாக வேலை செய்யும்.
குடல் ஆரோக்கியம் என்பது வெயிட் லாஸ்க்கு ரொம்ப முக்கியம். அப்போ குடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய என்னென்ன உணவுகள் எல்லாம் நீங்க சேர்த்துக்கலாம் என்று பார்ப்போம்.
நிறைய நீர்ச்சத்துள்ள காய்கறிகள் அரைவேக்காடாக சாப்பிட வேண்டும். சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணிக்காய் சாப்பிடலாம். ஒரு டம்ளர் மோர் மதிய நேரத்தில் எடுத்துக் கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும் இரவு நேரங்களில் பூண்டு பால் எடுத்துக் கொள்ளும் போது பிரீ பையோட்டிக்காக செயல்பட்டு நம் குடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தக்கூடியதாக இருக்கும். இதெல்லாம் எடுக்கும் போது குடல் ஆரோக்கியம் மேம்படும் உடல் எடை குறையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“