கார்ன்பிளவர் மாவு, மைதா, பிரஷ் கிரீம் இல்லாமலேயே டேஸ்ட்டியான மஷ்ரூம் சூப் செய்யலாம். சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தனது மருமகள் மீனாவிடம் கேட்ட சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சக்கரசாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் சுவையான சூப் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பட்டர்
பூண்டு
ஸ்ப்ரிங் ஆனியன்
காளான்
உப்பு
கோதுமை மாவு
முந்திரி
வெங்காயம்
மிளகுத்தூள் அல்லது ஓரிகாமி
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் பட்டர் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன் தண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய காளான் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அதில் கோதுமை மாவு சிறிது சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் சூப்புCreamy mushroom soup recipe
பின்னர் இந்த காளானில் சிறிது எடுத்து மிக்ஸியில் சேர்த்து அதில் ஊறவைத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்து அந்த வதக்கிய காளானுடன் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
இறக்குவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன் மிளகுத்தூள் அல்லது ஒரிகாமி, ஸ்ப்ரிங் ஆனியன் மேலே தூவிவிட்டு இறக்கி பரிமாறலாம்.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பு
இந்த மாதிரி காளான் சூப் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். அதுமட்டுமின்றி ரத்த அழுத்த அளவை அதிகரிப்பதை தடுக்கவும், சிறுநீர்ப்பை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. எனவே இவற்றை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.