இரவில் பாதாம் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டிருப்பர். பலர் இதுபற்றி நம்மிடமும் சொல்லியிருப்பர். ஆனால் இதில் உள்ள முழுமையான நன்மைகளைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆயுர்வேத நிபுணர் கீதா வரா பாதாமில் உள்ள நன்மைகள், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக கூறுகிறார்.
பாதாம் உடலில் ஜீரணிக்க கடினமாக இருக்கும். அதனால் அதை ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்கிறார். பாதாம் தோலில் ஆன்டி-நியூட்ரியண்ட்ஸ், டானின்கள், பைடிக் அமிலம் இருப்பதால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். எனவே அதை இரவில் ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது. ஊறவைத்த பாதாம் மென்மையான அமைப்பு, இனிப்பு சுவை கொண்டது. எனவே இது செரிமானத்திற்கு உகந்ததாக இருக்கும் என்கிறார்.
பாதாம் நன்மைகள் என்ன?
பாதாம் மிகவும் சத்தான பருப்பு வகைகளில் ஒன்றாகும். அவற்றில் அதிக அளவு மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது கெட்ட கொழுப்புகளை நீக்க வல்லது. பாதாமில் புரத சத்து உள்ளது. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
பாதாமில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா 3, ஒமேகா 6, மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் நிறைந்துள்ளது. மூளை, நரம்புகளுக்கு உகந்தாக உள்ளது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மாதவிடாயின் போது உதவியாக இருக்கும் என்று கீதா தெரிவித்தார்.
எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும்?
இரவில் ஊறவைத்த பாதாம் காலையில் 5-10 சாப்பிடலாம். இரவில் ஊறவைத்து காலையில் தோல் உரித்து சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil