பொதுவாகவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எளிதில் சளி,இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படுவது சாதாரண ஒன்றாகும். சளி இருமல் வந்த உடனேயே மாத்திரை, டானிக்குகள் குடிப்பது தவறு. அதுவும் குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு உடனேயே மருந்துகள் சாப்பிடாமல் அந்த சளியை இலக்கி வெளியேற்றுவதற்கு தேவையானவற்றை உணவிலேயே நாம் கடைபிடிக்கலாம்.
மிளகு: ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்து இளஞ்சூடாக ஆறவைத்து குடித்தால் சளியை நன்றாக வெளியேற்றுவதற்கு உதவும்.
மணத்தக்காளி கீரை, தூதுவளை கீரை: குளிர் காலத்திலும் மழைக்காலத்திலும் மணத்தக்காளி கீரை, தூதுவளை கீரை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்களும் சளியை இலக்கி வெளியேற்றி விடும்.
தூதுவளை: ரசம், சட்னி, துவையலாகவோ செய்து சாப்பிடலாம். அதிலும் தூதுவளையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து சாப்பிட்டால் சளியை இலக்கி வெளியேற்றும்.
துளசி: ஒரு டம்ளர் தண்ணீருடன் துளசியை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு அதனுடன் தேன் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அந்த கசாயத்தை சாப்பிட்டால் குளிர்காலங்களில் வரக்கூடிய இருமல் மற்றும் சளி குணமாகும்.
ஆடாதொடை: ஆடாதொடை இலை சாறு எடுத்து தேனையும் குழைத்து சாப்பிட்டால் சளி பிரச்சனை நீங்கும். அதில் கசாயம் வைத்தும் குடிக்கலாம். இதனால் சளி வெளியேறி இருமல் குறையும்.
சித்தரத்தை: குளிர் மற்றும் நாள்பட்ட இருமலுக்கு ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து. இதன் வேரை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமலை குறைக்கும்.
அடிக்கடி இருமல் சளி போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக இருந்தால் சுடுதண்ணீர் குடித்தாலே சளி இலகி வெளியேறிவிடும் அதுமட்டுமின்றி இருமலும் நின்றுவிடும். அதே மாதிரி சளி, இருமலுடன், காய்ச்சல் இருந்தாலோ அல்லது இந்த உணவுகள் எல்லாம் சேர்த்துக் கொண்டும் சளி, இருமல் தொடர்ச்சியாக ஒரு மூன்று முதல் நான்கு நாட்கள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை கண்டிப்பாக அணுகுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“