45 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மாதவிடாய் இறுதிக் கட்டத்தில் இருப்பர். அப்போது அவர்கள் உடல் சற்று வலுவிழக்கலாம். எனவே அவர்கள் ஆரோக்கியமாகவும், எலும்புகள் வலுவுடனும், எடை அதிகரிக்காமலும், கேன்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கவும் பல்வேறு மருத்துவ முறைகளை கடைப்பிடிப்பர்.
இதையும் படியுங்கள்: ’15 சத்துக்களின் ஆதாரம்’: பாதாம் பயன்கள் பற்றி விவரிக்கும் நடிகை நிஷா கணேஷ்
இந்தநிலையில், மாதவிடாய் இறுதி நிலையில் உள்ள பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள் குறித்து தனியார் யூடியூப் சேனலில் மருத்துவர் உஷா நந்தினி விளக்கம் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சோயா: மாதவிடாய் இறுதி நாட்களில் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான காரணம் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பு தான். இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்புக்கு காரணமாக சோயா உள்ளது. எனவே பெண்கள் கண்டிப்பாக சோயாவை தவிர்க்க வேண்டும்.
வெள்ளைச் சக்கரை: பளப்பளப்பாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்படும் வெள்ளைச் சக்கரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே 45 வயதுக்கு மேல் உள்ள எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால், பால் பொருட்கள்: தற்போது கிடைக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும். இதனால் பல்வேறு உடல் நலப் பிரச்சனை ஏற்படலாம். எனவே பால் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட சூடான உணவுகள்: சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாகளில் அடைத்து வைத்து சாப்பிடும்போது, வெப்பமானது பிளாஸ்டிக்குடன் வினைப்புரிந்து பல்வேறு அபாயகரமான நச்சுக்களை உடலில் சேர்க்கிறது. இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரித்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இறைச்சி உணவுகள்: இறைச்சி உணவுகள், பிராய்லர் சிக்கன், துரித உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இவை இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். விரும்பினால் ஆட்டிறைச்சி, மீன் போன்றவற்றை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil