Rasi Palan 29th January 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 29th January 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 29th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 29th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 29, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

இன்றைய நாள் 

ஒரு ஜோதிடராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பேய், பிசாசு, மந்திரம், ஜாலம், மேஜிக் போன்றவை செய்பவர்கள் அல்ல ஜோதிடர்கள். யார் ஒருவர் அமைதியாக போதனை கேட்க விரும்புவார்களோ, அவர்களுக்கு மட்டுமே சொல்ல வேண்டிய ஒரு துறை ஜோதிடம். இதன் அடிப்படையே அமைதியாக இருத்தல் தான்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் பிரச்சனைகளுக்கு மற்றவர்களின் நிர்வாகத்தை குறை கூறுவது என்பது சரியாகாது. எனினும், உங்கள் பிரச்சனைகளுக்கு உங்கள் நட்சத்திரங்களே காரணம். நீங்கள் குறை கூற வேண்டுமெனில், நட்சத்திரங்களை குறை கூறுங்கள். தற்போது உங்களின் நீண்ட ஓட்டத்தில் தடைகளை பதிப்பது அவை தான்.

ஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்கு மத்திய அரசு முடிவு

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சில ஆச்சர்யமான நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அது முடிவில்லா சம்பவங்களாக உருமாறும் என்பதை எச்சரிக்கை தேவை. இன்று நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அமைதி, கூல் மற்றும் செய்திகளை சேகரிப்பது. உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க சில சூழல்கள் அமையும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் பணியிடத்தில் நீங்கள் பெருத்த அமைதி காக்க வேண்டியது அவசியம். பொறுமை காக்க வேண்டிய கட்டங்கள் உங்களை சூழ்ந்துள்ளதால், அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நல்ல விஷயங்களை பகிருங்கள். உங்களுக்கும் அது திரும்பி வந்து சேரும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்கள் பணியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது. ஆனால், வாய்ப்புகள் கதவு பெரியளவில் இல்லை. நிதி நெருக்கடிகளை சந்திக்க மாட்டீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழி பட்டால் சிறப்பு. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இல்லற வாழ்க்கையில் திடீர் இனிப்பு உருவாகும். மாற்றங்களை உணர்வீர்கள். காதலர்களின் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எலக்ட்ரிக்கல் துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ரயிலில் வெளியூர் செல்ல நேரிடலாம். அது திடீர் பயணமாக அமையும். திருமண தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இன்பமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

செலவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். வீண் விவாதங்களில் தலை காட்ட வேண்டாம். அது உங்களுக்கே எதிராகக் கூட திரும்ப வாய்ப்புள்ளது. பெண் சுகம் வெறும் மாயை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர இது முதல் புள்ளியாக இருக்கலாம். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் யாரும் உங்களை ரசிக்கப் போவதில்லை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நான் தான் ராஜா என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்கம் வெற்றி வரவே வராது. அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிப் பெற இன்றைய நாள் உதவாது என்பதே உண்மை.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உடல் நலத்திற்கு இப்போதைக்கு ஆகாது. முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிட்டால் சிறப்பு. மேலோட்டமான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெற்றி உங்களுக்காக காத்திருக்காது. நீங்கள் தான் அதை நோக்கிச் செல்ல வேண்டும். உங்களது உழைப்பு போதாது. இருப்பினும், பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close