By: WebDesk
Updated: January 27, 2020, 12:50:22 PM
தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவீத முதலீடு மீட்புக்கான (Disinvestment) குறிப்பை மத்திய அரசாங்கம் தற்போது வெளியிட்டது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஐசாட்ஸில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் கட்டுப்பாடு வெற்றிகரமான ஏலம் எடுப்பவர்களுக்கு மாற்றப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் இதற்கான விருப்ப விண்ணபத்தை மார்ச் 17-ம் தேதிக்குள் தெரியபடுத்த வேண்டும்.
ஏசாட்ஸ் என்பது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இது தரை கையாளுதல் சேவைகளை வழங்கி வருகிறது .
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ், ஏர்லைன் அலையட் சர்வீசஸ் ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்றவைகள் ஏர் இந்தியா துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த துணை நிறுவனங்கள் அனைத்தும் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (ஏஐஏஎச்எல்) என்ற தனி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படும். மேலும் தற்போது முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் கீழ், இந்த துணை நிறுவனங்கள் எதுவும் விற்பனைக்கு விடப்பாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ .50,000 கோடிக்கு மேல் கடன் சுமை கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாக இழப்பை ஏற்படுத்தி வந்திருந்தது. இழப்பை ஈடு செய்யும் ஒரு பகுதியாக, முதலீடு மீட்புக்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வந்திருந்தது . எவ்வாறாயினும், இந்நாள் வரையில் தேசிய கேரியர் இந்திய அரசின் கைகளில் இருக்க விரும்பி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.