ஒவ்வெரு வருடமும் சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவான் முதல் ராசியான மேஷத்தில் குடியேறுவதை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று கொண்டாப்படுகிறது. 60 வருடங்களை கொண்ட தமிழ் ஆண்டுகளில் தற்போது சுபகிருது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த சுபகிருது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 14- முதல் சுபகிருது ஆண்டு தொடங்க உள்ளது.
இந்த சுபகிருது ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்கள் குறித்து பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுபகிருது வருடம் சிறப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குரு மற்றும் சூரியபகவானின் பார்வையால் நன்மைகள் வரும். தொழில் வளர்ச்சி இருக்கும். இடமாற்றம் பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிறைய பயணங்கள் செல்வீர்கள். புதிய தொழில் சிறப்பாக அமையும். இடம், பொருள், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீடு கட்டும் பணி சிறப்பாக இருக்கும். கடன் சிரமம் குறைவும், குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுபகிருது வருடம் சற்று சிரமத்தை கொடுக்கும். தாராள குணம், தொழில்பக்தி, புத்தி கூர்மை உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆனால் பெற்றோர்க்கு உடல்நலக்குறைவு ஏற்படும். குழந்தை பாக்கியம் மற்றும் சுப காரியங்கள் நடந்தாலும், சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் எச்சரிக்கை அவசியம். வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை அளிக்கும். சங்கரஹடசதூர்த்தியில் விநாயகரை வணங்குவது அதிக நன்மை தரும்.
மிதுனம்
இந்த சுபகிருது ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக ஏற்றத்தை கொடுக்கிறது. குழந்தைகள் கல்வியில் சிறப்பு, உத்யோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். அதே சமயம் வாரத்தில் செவ்வாய் கிழமை ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து ஆபத்துகளில் இருந்து நீங்க வழி கிடைக்கும். குடும்பத்தை விட்டு வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையில் இருந்த பிரச்சனை நீங்கி நன்மை உண்டாகும். சிவனை வணங்கினால் தாயார் உடலை பாதிப்பில் இருந்து விலகலாம். புதிய செயல்களில் இறங்கும்போது நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சுபகிருது ஆண்டு சிறப்பாவே அமைந்துள்ளது. தாய்வழி உறவில் பல ஆதாயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் மீது இருந்த பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும் வாய்ப்புகள் அதிகம். வெளிநாடு செல்வது அல்லது வெளியூர் செல்வது போன்ற பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். குருபகவானை வியாழன் கிழமைகளில் வணங்கி வருவது நன்மைகள் அதிகரிக்க வாய்ப்பாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு வரும். அம்மனை தரிசிப்பதால் இதில் இருந்து தப்பிக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுபகிருது ஆண்டு வெற்றியை கொடுக்கும். உங்களால உங்கள் பெற்றோருக்கு பெருமை சேரும். கோபத்தை தவிர்த்தால் மனதில் உள்ள பாரங்கள் குறையும். உணவு தானம் வழங்குவது சிவனை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழல் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் புத்திகூர்மை இருக்கும். அம்மனை தரிசிப்பதன் மூலம் கணவன் மனைவி பிரச்சனையில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. எந்த செயலிலும் யோசித்து இறங்குவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிவனை வணங்குவது சிக்கலில் இருந்து விடுபட வழி கிடைக்கும். சாமிக்கு நேர்த்திக்கடன் இருந்தால் உடனடியாக செய்துவிடுங்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக கணவன் மனைவி பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த இடம் வாங்க வாய்ப்பு வரும். கூடவே சில இடையூறுகளும் வரும் யோசித்து செயல்படுவது நல்லது. நரசிம்மர், தட்சினாமூர்த்தி, அல்லது பெருமாளை வழிபடுவது நல்லது. சிவனுக்கு வில்வ வழிபாடு கூடுதல் நன்மைக்கு வழி.
திருமண பாக்கியம்… சொந்த வாகனம், சொத்து… துலாம் முதல் மீனம் வரை : தமிழ் புத்தாண்டு பலன்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“