scorecardresearch

திருமண பாக்கியம்… சொந்த வாகனம், சொத்து… துலாம் முதல் மீனம் வரை : தமிழ் புத்தாண்டு பலன்கள்

தமிழ் புத்தாண்டு தினத்தில் துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசி பலன்களை பார்க்கலாம்

Rasi palan, New Year Rasi Palan, New Year Horoscope, Today Rasi Palan, Today Rasipalan, Rasipalan today, Rasi Palan Today, January 18th 2023 Rasipalan, Today rasi palan, daily rasi palan, rasi palan 18 January horoscope today, daily horoscope, horoscope 2023 today, today rasi palan, astrology, horoscope 2023, new year horoscope, புத்தாண்டு ராசி பலன்கள், 2023 ராசி பலன்கள், 2023 புத்தாண்டு ராசி பலன்கள், இன்றைய ராசிபலன், ஜனவரி 18ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், குரு பெயர்ச்சி, Guru Peyarchi, horoscope today, daily horoscope, horoscope 2023 today, today rashifal, astrology, horoscope 2023, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today, scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today
தமிழ் புது்தாண்டு ராசி பலன்கள்

ஒவ்வெரு வருடமும் சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவான் முதல் ராசியான மேஷத்தில் குடியேறுவதை சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று கொண்டாப்படுகிறது. 60 வருடங்களை கொண்ட தமிழ் ஆண்டுகளில் தற்போது சுபகிருது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த சுபகிருது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 14- முதல் சுபகிருது ஆண்டு தொடங்க உள்ளது.

இந்த சுபகிருது ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்கள் குறித்து பார்ப்போம்.

மேஷம் முதல் கன்னி வரை… சொந்த வீடு, வெளிநாடு பயணம்… தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சோபகிருது ஆண்டு பெரிய நன்மைகளை அளிக்கும். புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு கடன் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள் உங்களால் முடிந்த அளவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரித்தாலும் பிள்ளைகள் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுவது நல்லதல்ல. வாரந்தோறும் மகாவிஷ்ணுவை வணங்குவது பிரச்சனைகளில் இருந்து விடுபட நல்ல வழி.

விருச்சகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த சோபகிருது ஆண்டு சில தடைகள் ஏற்படும். வாகன பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உத்தியோசத்தில் மாற்றம், சுப செலவுகள் அதிகரிக்கும் நாள். செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபடுவது நல்லது. மாதத்தில் ஒருமுறை குலதெய்வத்தை வழிபட வேண்டும். வீழ்ச்சியை பற்றி சிந்திக்காமல் உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகள் இருந்தாலும் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு

இந்த சோபகிருது ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கும் நிலை உள்ளது. புதிய வீ, புதிய தொழில், புதிய வேலை என அனைத்தும் புதிதாக அமையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். பெற்றோருடன் இருந்த பிரச்சனை நீங்கி அனைவரும் ஒன்றாக இருப்பீர்கள். வெள்ளிக்கிமைகளில் பார்வதி தேவியை வணங்கி வேண்டிக்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த எதிர்கால கணவுகள் நிறைவேறும். திருமண தடை நீங்கி சொந்தங்களின் ஆதரவு பெருகும். வெளிநாடு செல்லும் பாக்கியம் கூட்டுத்தொழில் நன்மை அதிகரிக்கும்.

மகரம்

இந்த சோபகிரு வருடத்தில் தொழில் சார்ந்த விஷயத்தில் ஏற்றம் காணும் மகர ராசிக்காரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண தடை நீங்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அதே நேரம் உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும். எதற்கும் கலங்காமல் உங்களது அயராத உழைப்பை தொடர வேண்டும். சனிபகவானை வழிபடுவது நன்மை தரும். ஒரு மண்டலம் வீட்டில் அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மகராசிக்கு முக்கியம்.

கும்பம்

இந்த சோபகிருது வருடத்தில் தடைகளில் இருந்தும் அவமானங்களில் இருந்தும் மீண்டு வரும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாகவே அமையும். தொழில், வியாபாரம், படிப்பு ஆகியவற்றில் ஏற்றம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இருந்த சண்டை நீங்கி அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனை குறைந்து கடந்த கால கஷ்டத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. திருமண நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆஞ்சநேயர் மற்றும் சனிபகவானை தொடர்ந்து வழிபடுவது கூடுதல் நன்மைக்கு வாய்ப்பளிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சோபகிருது ஆண்டு வாழ்க்கையின் முன்னேற்றத்தை குறிக்கிறது. வாங்கிய கடனை கொடுத்துவிடுவீர்கள். தொழிலில் மாற்றம் ஏற்படும். வேலை படிப்பு, மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுமோகமான சூழல் உண்டாகும். இந்த ஆண்டு ஏற்படும் அனைத்து மாற்றங்களும் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும். கையை விட்டு போன பணம் எல்லாம் திரும்ப கிடைக்கும். மகான்களை வழிபடுவது குலதெய்வ வழிபாடு துர்க்கை அம்மன் வழிபாடு அதிக நன்மை தருவதாக இருக்கும். அனைத்து கவலைகளும் நீங்கி முன்னேற்ற பாதையில் தொடர வழி தரும்.

மேஷம் முதல் கன்னி வரை… சொந்த வீடு, வெளிநாடு பயணம்… தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Tamil new year subakiruthu year horoscope benefits for thulam to meenam