காட்டு வழிப் பயணம் : சொந்த ஊரை நெருங்கும் போது மரணமடைந்த 12 வயது சிறுமி

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் மிளாகாய் தோட்டம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

By: Updated: April 22, 2020, 09:06:44 PM

12 year old daughter of migrant labours passed away : தெலுங்கானா மாநிலத்தில் அமைந்திருக்கும் மிளகாய் வயல்களில் பணியாற்றுவதற்காக வட இந்தியர்கள் பலர் அம்மாநிலத்தை நோக்கி படையெடுப்பது வழக்கம். சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் மிளாகாய் தோட்டம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் தங்களின் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு பயணமானார்கள். தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்த அவர்கள் வனப்பகுதியே 150 கி.மீ நடந்துள்ளனர். 15ம் தேதி நடக்க துவங்கியவர்கள் தங்களின் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க : அம்மாவின் ஆசை : தங்கையை அழைத்து வர 80 கி.மீ பழைய சைக்கிளில் பயணமான அண்ணன்

அப்போது அந்த குழுவை சேர்ந்த ஜம்லோ என்ற 12 வயது சிறுமி திடீரென மரணமடைந்தார். இது குறித்து அப்பகுதி முதுநிலை மருத்துவ அதிகாரி பி.ஆர்.பூஜாரி கூறும் போது, அந்த சிறுமி நடந்து வரும் போது தன்னுடைய நீர் சத்து முழுவதையும் இழந்துவிட்டார். ஊட்டச்சத்து குறைப்பாடு இருந்த அவர் தொடர்ந்து சோர்வடைய, உடல் நலக் குறைவால் மரணத்தை தழுவியுள்ளார். அவரின் குடும்பத்திற்கு சத்தீஸ்கர் அரசு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:12 year old daughter of migrant labours passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X