26/11 Stories of Strength : மும்பை தீவிரவாத தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவர்களின் கதை இது!

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் அனைத்து டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்களிலும் 26/11 Stories of Strength நிகழ்ச்சி இன்று மாலை 05:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

26/11 Stories of Strength 11th anniversary of the Mumbai terror attacks : மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இருவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் 26/11 ஸ்டோரீஸ் ஆஃப் ஸ்ட்ரெந்த் ( 26/11 Stories of Strength) நிகழ்வின் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.


மும்பை தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பித்து வெளியே வந்த 100க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பதிவு செய்து வந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர்களின் துணிச்சல், மன்னிக்கும் பண்பு, தன்னம்பிக்கை குறித்து இந்த பதிவுகள் அனைத்தும் அமைந்தது.

26/11 Stories of Strength
2016ம் ஆண்டு முதல் இந்த நிகழ்வை தொகுத்து வழங்குகிறார் நடிகர் அமிதாப் பச்சன் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் : By Nirmal Harindran)

மேலும் படிக்க : மும்பை தாக்குதல் 11ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்தும் பாதுகாப்பு படையினர்!

2016ம் ஆண்டு முதல் இந்த 26/11 Stories of Strength நிகழ்வை தொகுத்து வழங்குகிறார் நடிகர் அமிதாப் பச்சன். இங்கு நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் இயக்குநர் ஆனந்த் திவாரியால் தொகுத்து வழங்கப்படுகிறது. நடிகர் விக்கி கௌசல் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்களை பேட்டி கண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் அனைத்து டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்களிலும் 26/11 Stories of Strength நிகழ்ச்சி இன்று மாலை 05:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த கலை நிகழ்ச்சியை நீங்கள் ABP News, Republic TV and big92.7fm ஆகியவற்றிலும் பார்த்து ரசிக்கலாம்.

To read this article in English

டாக்டார் எல். சுப்ரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஜானே தலால், ரேகா பரத்வாஜ், ஹர்ஷ்தீப் கௌர், திவ்யா குமார், ஷில்பா ராவ், ஷியாமக் தேவர் டான்ஸ் நிறுவனம், சிம்பனி ஆர்க்கஷ்ட்ரா ஆஃப் இந்தியா, இந்தியன் நேவி பேண்ட் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறுகிறது.

இந்நிகழ்வு சரியாக மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வு தொடங்கியதும், மும்பை போலீசாரின் பேண்ட் வாத்தியமும், கப்பற்படையினரின் பேண்ட் வாத்தியமும் நடைபெற்றது.

#StoriesOfStrength
#StoriesOfStrength

நடிகையும், இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, இந்திய ஜவான்களை போற்றும் வகையில் கவிதை நடையில் அவர்களை பெருமைப்படுத்தினார்.

பாடகர் திவ்யகுமார் கப்பற்படையினருடன் இணைந்து பாடல் பாடினார். பார்வையாளர்களை பெரிதும் கட்டிப் போடும் விதமாக அப்பாடல் இருந்தது.

தொடர்ந்து, பாடகி ஹர்ஷ்தீப் கௌர், ஷில்பா ராவ் ஆத்மார்த்தமான பாடலை பாட, பார்வையாளர்கள் நிசப்தமாகினர்.

இசை மழை முடிந்த பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், “தாக்குதலில் இருந்து மீண்டு வந்த மும்பை மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்றார். மேலும்,

பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படையின் அதிகாரி ஹேமந்த் கர்காரே 2011ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது எதிரிகளுடன் சண்டையிட்டு அதில் வீரமரணம் அடைந்தார். இதுகுறித்து கட்காரி பேசுகையில், ‘ஹேமந்த் கர்காரேவின் தியாகம் வீண் போகாது’ என்றார்.

முன்னதாக, நடிகர் ராதிகா ஆப்தே  26/11 தாக்குதலின் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய ‘ஹீரோக்களுடன்’ பேசுகிறார். ‘சீருடையின் சக்தியே மக்களை காப்பாற்றவும் உதவவும் செய்தது’ என்று அந்த மோசமான தினத்தின் போது தனது நோயாளிகளை கவனித்துக் கொண்ட செவிலியர் கூறுகிறார்.

@ vickykaushal09 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த என்.எஸ்.ஜி கமாண்டோ கஜேந்திர பிஸ்டின் மகள் ப்ரீத்தி பிஸ்டுடன் உரையாடிய போது,

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அண்டை நாடான பாகிஸ்தான் அதன் மண்ணில் இருந்து வெளிப்படும் தீவிரவாதத்தை நிறுத்தவில்லை எனில் பக்க விளைவுகளை சந்திக்கும்” என எச்சரித்தார்.

பிறகு, அமிதாப் பச்சனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசப்பற்றை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியை, பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

இறுதியில், 26/11 #StoriesOfStrength நிகழ்வு தேசிய கீதத்துடன் நிறைவுப் பெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அமித் ஷா, அமிதாப் பச்சன், ஆனந்த் கோயங்கா என அனைவரும் மேடையில் திரள, தேசிய கீதம் இசைக்கப்பட்டு 11வது ஆண்டு நினைவு தினம் முடிவுக்கு வந்தது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 26 11 stories of strength 11th anniversary of the mumbai terror attacks

Next Story
மும்பை தாக்குதல் 11ம் ஆண்டு நினைவு நாள் : அஞ்சலி செலுத்தும் பாதுகாப்பு படையினர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express