30% women in India subjected to physical, sexual violence: NFHS: இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு-5 அறிக்கை கூறுகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை 31.2% இலிருந்து 29.3% ஆக குறைந்துள்ளது. ஆனால் அதேநேரம், 18 முதல் 49 வயதுக்குட்பட்ட 30% பெண்கள் 15 வயது முதல் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்துள்ளனர். மேலும், 6% பேர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியா வியாழக்கிழமை வெளியிட்டார்.
உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் 14% பேர் மட்டுமே இந்தப் பிரச்சினையை வெளியில் கொண்டு வந்துள்ளனர்.
”NFHS-4 என்பது 15-49 வயதுக்குட்பட்ட பெண்களை உள்ளடக்கியது என்பதாலும், NFHS-5 என்பது 18-49 வயதுடைய பெண்களை உள்ளடக்கியது என்பதாலும், NFHS-5 ஆனது NFHS-4 மற்றும் 5 க்கு இடையில் அதிக நுணுக்கமான ஒப்பீடு சாத்தியமில்லை".
திருமணமான பெண்களில் 32% (18-49 வயது) உடல், பாலியல் அல்லது துணையின் எமோஷனல் வன்முறையை அனுபவித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. வாழ்க்கைத் துணை வன்முறையின் மிகவும் பொதுவான வகை உடல்ரீதியான வன்முறை (28%) ஆகும், அதைத் தொடர்ந்து எமோஷனல் வன்முறை மற்றும் பாலியல் வன்முறை.
ஆனால், நாட்டில் 4% ஆண்கள் மட்டுமே குடும்ப வன்முறை வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை கர்நாடகாவில் 48% என அதிகமாக உள்ளது, அதைத் தொடர்ந்து பீகார், தெலுங்கானா, மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் உள்ளன. லட்ச தீவுகளில் குடும்ப வன்முறை 2.1% என்ற அளவில் குறைவாக உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது (24%) கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே (32%) உடல்ரீதியான வன்முறை மிகவும் பொதுவாக அதிகமாக உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றவாளிகளான ஆண்களிடையே அதிகரித்த பள்ளிப்படிப்பு மற்றும் செல்வம் காரணமாக பெண்களின் வன்முறை அனுபவம் குறைந்து வருகிறது.
பள்ளிப்படிப்பை முடித்த 18% பெண்களுடன் ஒப்பிடுகையில், பள்ளிப்படிப்பு இல்லாத 40% பெண்கள் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. உடல் ரீதியான வன்முறையின் அனுபவம், மிகக் குறைந்த செல்வம் உள்ள பெண்களிடையே 39% மற்றும் உயர்ந்த செல்வம் உடையவர்களிடையே 17% வரை இருக்கும்.
பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகளில் 80% வழக்குகளில், குற்றவாளி கணவர்தான்.
இதையும் படியுங்கள்: வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல்… தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?
12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்த கணவர்கள், பள்ளிப்படிப்பு இல்லாதவர்களை விட (43%) உடல், பாலியல் அல்லது எமோஷனல் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் பாதியாக (21%) உள்ளது. “கணவரின் மது அருந்துதல் அளவைப் பொறுத்து, கணவரின் உடல் அல்லது பாலியல் வன்முறையின் அனுபவம் பெரிதும் மாறுபடும். கணவர்கள் அடிக்கடி குடித்துவிட்டு வரும் 70% பெண்களை, கணவர்கள் மது அருந்தாத 23% பெண்களுடன் ஒப்பிடும்போது, 70% பெண்கள் துணை அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்,'' என்று அறிக்கை கூறுகிறது.
18-19 பிரிவினரை விட 40-49 வயதுடைய பெண்கள் அதிக வன்முறையை அனுபவிப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.