5 years old Vihaan Sharma traveled from Delhi to Bengaluru all alone
5 years old Vihaan Sharma traveled from Delhi to Bengaluru all alone : மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று முதல் உள்நாட்டு விமானங்களின் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டில் மாட்டிக் கொண்ட சிறுவன் டெல்லியில் இருந்து தனியாக பெங்களூருக்கு பயணமாகியுள்ளான்.
தாயை பிரிந்து வாடிய அந்த சிறுவன் விஹான் இன்று காலை 09 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி, தனியாக பெங்களூருவில் இருக்கும் கெம்பகௌடா விமான நிலையத்தை அடைந்துள்ளார். விஹான் தரையிரங்கிய சிறிது நேரத்தியிலேயே அவருடைய தாயார் அவரை வந்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.
Advertisment
Advertisement
விமான நிலையத்தில் தனியாக நின்றிருந்த விஹான், சிறப்பு வசதியில் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். அவருடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கையுறை, முகமூடி, பாஸ், சிறப்பு வசதிக்கான அட்டை மற்றும் அவருடைய கையில் போன் என பெங்களூரு வந்திரிக்கிறார் விஹான். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விஹானுக்கு தேவையான அறிவுரைகளை செல்போன் மூலம் வழங்கிக் கொண்டிருந்தனர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“