/tamil-ie/media/media_files/uploads/2020/08/lZrIALoK.jpg)
50-year old pavement dweller stood for 7 hours in rain to warn about manhole : மும்பையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மதுங்கா மேற்கு பகுதியில் கடந்த வாரம் துளசி பைப் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வந்த கந்தா மாருதி காலன் என்ற பெண்மணி, சாலையில் இருந்த கழிவுநீர் செல்லும் பகுதியில் மேற்பகுதியை திறந்துவிட்டிருக்கிறார். மழை நீர் முழுமையாக வடியும் வரை அதன் அருகிலேயே 7 மணி நேரம் அவர் நின்றிருந்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாலையோரம் சாளை அமைத்து தங்கியிருக்கும் அவர் இந்த மழை காலத்தில் தன்னுடைய சிறிய கூடாரம் மற்றும் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் தொலைத்திருந்தார் காலன். இருப்பினும் அந்த பகுதியில் பயணிக்கும் எந்த மக்களும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட கூடாது என்பதை உணர்ந்து அவர் அங்கேயே நின்றிருக்கிறார்.
மேலும் படிக்க : தற்கொலை லைவ் : ஐயர்லாந்தில் இருந்து போன் மூலம் மும்பை போலீஸை உஷாராக்கிய ஃபேஸ்புக்
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி புகழ்பெற்ற தீபக் அமரபுர்கார் இவ்வாறாக திறந்து வைக்கப்பட்ட சாக்கடை குழியில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்கள் கழித்து அவர் வொர்லியில் சடலமாக மீட்கப்பட்டார். தாதர் சந்தையில் பூ விற்று வரும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் 15 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தால் நாடமாடாத நிலையில் காலனை விட்டு தனியாக வசித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.