கொரோனாவை வென்றெடுத்த 93 வயது உருது கவிஞர்!

அவர் அருகே இருந்து அவரை கவனித்துக் கொள்ளாமல் போனது தான் மிகவும் வேதனையாக இருந்தது - 84 வயது மனைவி

By: Updated: June 9, 2020, 01:31:45 PM

Somya Lakhani

93-year-old Urdu poet Anand Mohan Zutshi Gulzar Dehlvi wins covid19 fight : புகழ்பெற்ற உருது கவிஞர் ஆனந்த் மோகன் ஜுட்ஷி குல்ஜார் டெஹ்ல்விக்கு (Anand Mohan Zutshi Gulzar Dehlvi) வயது 93. மே மாதம் 28ம் தேதி அவருடைய ஆசை பேத்திக்கு அமெரிக்காவில் திருமணம். கவிஞர் தன்னுடைய எழுத்தை கவிதைகளாக்கி, தன்னுடைய குரலாலே ஒலிபதிவு செய்து பேத்திக்கு வாழ்த்துகளை அனுப்பினார். அன்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை அருகில் இருக்கும் நொய்டா கைலாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு நொய்டா சாரதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. 7ம் தேதி அன்று அவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்தார். இது தொடர்பாக கௌதம் புத் நகர் ஆட்சியாளார் சுஹாஸ் எல்.யு. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “என்னைப் போன்ற பலரை நீங்கள் இன்ஸ்பையர் செய்து, மோட்டிவேட் செய்து மேலும் உழைக்க வைக்கின்றீர்கள்” என்று கூறி ட்வீட் செய்திருந்தார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

டெஹ்லவியின் உடல்நிலை குறித்து அவருடைய மனைவி கவிதா கூறுகையில் “28ம் தேதி இரவு, கவிஞருக்கு 103 டிகிரியில் காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. அவர் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நான் மருந்து கொடுத்தேன். பிறகு அவர் கொஞ்சம் சரியானார். ஆனால் அடுத்த நாள் காலை அவரால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை. என்னுடைய மகன் அவரை கைலாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மே 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு அவர் அங்கிருந்து ஷாரதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் குணமடைந்த பிறகு தற்போது இங்கே இருக்கிறார். வீட்டில் மேலும் அவருக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவர் சோர்வாக இருக்கிறார். அவரால் பேசமுடியவில்லை. ஆனால் என்னால் கூறமுடியும் அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று” என அவர் தெரிவித்தார்.

டெஹ்ல்வி ஒரு காஷ்மீர் பண்டிட். இந்திய அரசால் நடத்தப்பட்ட ஒரே ஒரு உருது அறிவியல் சஞ்சிகையான சையின்ஸ் கி துனியாவின் ஆசிரியாக பணியாற்றினார். இந்தியா முழுவதும் உருது பள்ளிகள் திறப்பதற்கு தன்னுடைய பங்களிப்பை நல்கியவர் இவர். பழைய டெல்லியின் கலி கஷ்மீரியன் பகுதியில் கவிஞர்கள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இப்பகுதியில் இருக்கும் சீதாராம் மார்க்கெட், அவருடைய முன்னோர்களின் நினைவால் வைக்கப்பட்டது. 1930களில் இருந்து விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் பல பிரச்சார கூட்டங்களில் இவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கூகுளின் ஜிமெயிலில் இந்த சேவைகள் எல்லாம் இருக்கா? – நம்பவே முடியல

10 நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்னால் மருத்துவமனைக்கு சென்று அவருடன் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் அதிகமாக இருந்தது. ஷார்தா மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள், டெஹ்ல்வியுடன் நான் பேச முடியும் என்பதை உறுதி செய்தார்கள். நான் டெஹ்ல்வியின் மருத்துவருக்கு கால் செய்தால், வீடியோ காலில் சில நிமிடங்கள் அவருடன் உரையாட முடியும். அவர்
மருத்துவருக்கு என்னையும், என்னுடைய மகனையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர் நலமாக இருப்பதாகவும் கூறினார். அவருக்கு எப்படி இந்த நோய் தொற்று ஏற்பட்டது என்றே புரியவில்லை. நாங்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. வெளியில் இருந்தும் யாரும் வீட்டுக்குள் வரவில்லை. எங்களின் மளிகைப் பொருட்கள் கூட பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் பாஸ்கட்டில் தான் வைக்கப்படும் என்றும் கவிதா கூறியுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், அவர் இங்கிருந்து செல்லும் போது எங்கள் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு சென்றார். அவர் எங்கள் அனைவரையும் ஒரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொன்னார் என்று நினைவு கூறுகிறார். அவர் தற்போது முழுமையான ஓய்வில் இருக்கிறார். பால், பழச்சாறு, பருப்பு மற்றும் கிச்சடி ஆகியவை மட்டுமே உணவு. இன்னும் கொஞ்ச நாட்கள் தான். பிறகு அவர் மீண்டு வந்து கவிதைகள் எழுதுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:93 year old urdu poet anand mohan zutshi gulzar dehlvi wins covid19 fight

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X