Advertisment

கேரளாவில் தொடரும் கனமழை : இடுக்கி அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளா மழை, இடுக்கி அணை, கேரள வெள்ளம்

கேரளாவில் தொடர்ந்து பெய்யும் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

கேரள மாநிலத்தில் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருவதால் கேரள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கன மழை காரணமாக அணைகளின் கொள்ளளவை எட்டும் வகையில் நீர் நிரம்புவதை தடுக்க அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

Advertisment

இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் தொடந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக இடுக்கியில் இருக்கும் சிறுதொணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் அந்த அணை தன்னுடைய முழுக் கொள்ளளவினை எட்டியது.

26 வருடங்கள் கழித்து முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை

26 வருடங்கள் கழித்து முதல் முறையாக இடுக்கி அணை நிறைந்து விட்டதால் அதன் மதகுகளை திறப்பதாக அறிவித்திருந்தது கேரள அரசு. நேற்று ஒரு மதகு திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் இரண்டு மதகுகளை திறந்து விட்டது அம்மாநில அரசு. தற்போது அனைத்து மதகுகளையுன் திறந்துவிட்டது கேரள அரசு.

முதல் மதகு திறப்பதை ஆர்பரித்துக் கொண்டாடிய கேரள மக்கள் பற்றிய செய்தியை படிக்க 

இடுக்கி மற்றும் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை  வெளியிடப்பட்டிருந்தது. கேரளாவில் மழையின் காரணமாக 48 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ளனர்.

இடுக்கி அணை, வெள்ள அபாயம், இடுக்கி அணை நீர்மட்டம் 3 மதகுகளின் வழியே வெளியேறும் இடுக்கி அணை உபரி நீர்

தொடர்ந்து கேரள அணைகளில் நிரம்பும் நீர்

கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கேரளாவில் மழை பெய்து கொண்டிருப்பதால் மாநிலத்தில் இருக்கும் சுமார் 22 அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள வரலாற்றில் 22 அணைகளும் நீரால் நிரம்புவது இதுவே முதல் முறையாகும்.

கேரளா விரைந்த பாதுகாப்பு படையினர்

August 2018

கண்ணூர் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் குறித்து மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள் பதிவிட்ட டிவிட்டர் பதிவு

இடுக்கி அணை - ஒரு சிறு பார்வை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு பெரும் மலைகளை இணைத்து கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய வளைவு அணை ஆகும்.

இந்த அணை 1973ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு, இதுவரை 1981 மற்றும் 1992 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே நிரம்பியுள்ளது. மூன்றாவது முறையாக நேற்று முன் தினம் நிரம்பியது இடுக்கி அணை என்பது குறிப்பிடத்தக்கத்து.

இடுக்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பயணிக்கத் தடை

இடுக்கி அணை நீர்மட்ட உயர்வு மற்றும் கனமழை காரணமாக யாரும் இடுக்கி பகுதியில் இருக்கும் மலைப்பகுதிக்கு பயணிக்க கூடாது என்று  தடை உத்தரவினை வெளியிட்டிருக்கிறது கேரள அரசு. சுற்றுலா பயணிகள் மற்றும் அல்லாது கனரக வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.

August 2018

அமெரிக்காவில் இருந்து இந்தியா பயணித்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு காரணமாக கேரளா பயணிக்க வேண்டாம் என்று அந்நாடு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5 கோடியை கேரளத்திற்கு தருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

Kerala Flood Thatstamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment