ஆதார் சட்டம் நிதி மசோதா : ஆதாரை எதற்கெல்லாம் கட்டாயமாக்க வேண்டும் என்று நேற்று ( 26/09/2018 ) மிக முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது உச்ச நீதிமன்றம். ஐந்து பேர் கொண்ட அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் ஆதார் சட்டம் நிதி மசோதாவாக மாற்றலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஐந்தில் நான்கு நீதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நீதிபதி சந்திரசூட் அதற்கு அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இதனைக் குறித்து அவர் தெரிவிக்கும் போது “மக்களுக்கான பொதுநலத்திட்டங்களை செயல்படுத்தும் போது அடையாள அட்டை தேவை என்பது புரிகிறது. அது ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தான். ஆனால் இது தனிநபரின் அடையாளம், பாதுகாப்பு, மற்றும் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது” என்று கூறினார்.
மேலும் படிக்க : இனி எதற்கெல்லாம் ஆதார் கார்ட் தேவையில்லை
ஆதார் சட்டம் நிதி மசோதா ஆகுமா ?
நேற்று இந்த வழக்கின் தீர்ப்பினை வாசிக்கும் போது ”மொத்த ஆதார் அட்டைக்கான திட்டமும் இந்திய சாசனத்திற்கு எதிராகவும், அடிப்படை உரிமைகளை கேள்விக்குறியாக்குவது போலவும் தான் இருக்கிறது” என்று கூறினார்.
இந்திய சாசனம் 110த்தின் எந்த ஒரு தகுதியையும் பூர்த்தி செய்யவில்லை ஆதார் சட்டம். பின் எப்படி அதனை நிதி மசோதாவாக அறிவிக்க முடியும் என்று கேள்வி கேட்டார்.
தகுதியே இல்லாத ஒரு சட்டத்தை மசோதாவாக அறிவிக்கும் போது அரசியல் சாசனத்தின் கட்டமைப்பாக இருக்கும் இரண்டு அவைகளுக்கும் அது சேதாரத்தை தான் ஏற்படுத்தும்.
மாநிலங்களவையில் ஒரு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டால், அந்த சட்டத்தினை மக்களவையில் நிறைவேற்றி புதிதாக சட்டம் ஒன்றை கொண்டு வர இயலாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தலைபட்சமாக ஒரு மசோதாவை சட்ட மசோதாவாக பாராளுமன்றத்தில் கொண்டு வருவது இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சந்திரசூட் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. அதற்காக ஆதார் அடையாள அட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சட்டத்திற்காக மற்ற அடிப்படைத் தகவல்களை ஏன் விட்டுத்தர வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் சந்திரசூட். ஒரு தனிநபர் அடையாளத்தினை பாதுகாப்பது தான் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் வேலை.
12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை இந்தியாவில் இருந்த பல்வேறு அடையாள அட்டைகளின் ஒற்றை மாற்று அட்டையாக வெளியானது. 2009ம் ஆண்உ தொடங்கி இன்று வரை அடிப்படை உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் ஆதார் சட்டம் இருக்கிறது. ஆதார் சட்டம் ஆதார் திட்டத்தினையோ, அதற்கான சரியான வழிமுறைகளையோ பின்பற்ற மறந்து விட்டது என்று சந்திரிசூட் கூறினார்.
மேலும் படிக்க : ஆதார் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பென்ன ?
டேட்டா பாதுகாப்பு
ஆதார் அறிமுகப்படுத்தப் படும் போதே பயோமெட்ரிக் அடையாள அட்டை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பதியப் படும் தகவல் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசிற்கு இருக்கு. ஆனால் டேட்டாவை பாதுகாக்கும் முக்கியமான ஃப்ரேம்ஒர்க் ரெகுலாரிட்டி இந்த ஆதார் சட்டத்தில் துளியும் இல்லை. அதன்படி பார்த்தால் அரசியல் சாசனம் 14ஐ ஆதார் அட்டை நிறைவேற்றவே இல்லை என்பது வெளிப்படை. 1.2 பில்லியன் மக்களின் தகவல்வகளை பாதுகாக்கும் பெரிய பொறுப்பினை ஆதார் திட்டம் நிர்வகிக்க தவறிவிட்டது.