Advertisment

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவை கொல்ல முயற்சி... துப்பாக்கிச் சூட்டில் தொண்டர் பலி!

கிஷன்கர் காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AAP volunteer accompanying Mehrauli MLA Naresh Yadav shot dead

AAP volunteer accompanying Mehrauli MLA Naresh Yadav shot dead

AAP volunteer accompanying Mehrauli MLA Naresh Yadav shot dead : ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வரலாற்று வெற்றியை ஆம் ஆத்மி கட்சி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மெஹ்ரௌலி எம்.எல்.ஏவை யாரோ கொலை செய்ய முயன்றுள்ளனர்.

Advertisment

AAP volunteer accompanying Mehrauli MLA Naresh Yadav shot dead

டெல்லி மெஹ்ரௌலி தொகுதி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ். இவர் நேற்று இரவு கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருக்கும் போது அவருடைய வாகனத்தை குறி வைத்து மர்மம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுள்ளார். இதில் அந்த கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அசோக் மான் என்ற அந்த நபரின் வயது 45 ஆகும். நான்கு முறை துப்பாக்கிச்ச்சூடு நடைபெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிஷன்கர் காவல் நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் குட்டி கெஜ்ரிவால் போட்டோ வைரல்

AAP volunteer accompanying Mehrauli MLA Naresh Yadav shot dead துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

இந்த நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. நான் இருந்த காரை நோக்கி தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை முறையான நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார் நரேஷ் யாதவ்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Delhi Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment