ஆனந்த் தெல்தும்டே கைதும் பின்னணி நிலவரமும்… ஏற்கனவே கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்களின் நிலை என்ன ?

குற்றம்சாட்டப்பட்ட 10 நபர்களில் 7 நபர்கள் சிறையில் உள்ளனர்.

By: Updated: February 3, 2019, 12:54:29 PM

Activist Anand Teltumbde : கடந்த வருடம் ஜனவரி 1ம் தேதி, மகாராஷ்ட்ரா மாநிலம், புனே, பீமா கோரேகான் பகுதியில் மஹர் இனத்தவர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். இருநூறு வருடங்களுக்கு முன்பு, பேஷ்வா ராணுவத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்து மஹர் என்ற தலித் இன மக்கள் போர் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.

அந்த நிகழ்வின் 200வது ஆண்டு விழாவை சிறப்பிக்க மஹர் இனத்தவர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். அதில் வன்முறை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். ஏராளமான பொதுச்சொத்துகள் சேதாரமாகின. எல்கர் பரிஷாத் என்ற நிகழ்வு தான் காரணம் என்று கூறி சமூக செய்ற்பாட்டாளர்களை புனே காவல்துறையினர் கைது செய்தனர்.

Activist Anand Teltumbde – கைதும் பின்னணி நிலவரமும்

அவர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஒருவரின் இல்லத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.  இதற்கு தேசம் முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.

முதற்கட்ட நடவடிக்கையாக ஜூன் மாதம் 6ம் தேதி சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை கைது செய்தது புனே காவல் துறை. பேராசிரியர் சோமா சென், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோர் அன்றிலிருந்து யேர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செயல்பாட்டாளர்களின் தற்போதைய நிலை என்ன ?

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சமூக செயல்பாட்டாளர்கள் அருண் ஃபெரைரா, வென்னான் கோன்சல்வ்ஸ், சுதா பரத்வாஜ், பி. வர வர ராவ், கௌதம் நவ்லகா உள்ளிட்டோரை கைது செய்ததோடு, ஆனந்த் தெல்தும்டே உட்பட்டோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

ஆனால் ஆனந்த் தெல்தும்டேவை கைது செய்வதற்கு ஏற்கனவே பிப்ரவரி 11ம் தேதி வரை தடை இருக்கின்ற நிலையில், மாவட்ட நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய, ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் ஆனந்த். அவரின் கைதுக்கு எதிராக பொதுமக்கள் கண்டங்கள் தெரிவித்து வந்தனர்.  கோவா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஆனந்த். நேற்று கைது செய்யப்பட்டவர் நேற்று மாலையிலேயே விடிவிக்கப்பட்டார்.

கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் 4 பேர் தற்போது சிறையில் உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுதா பரத்வாஜ், மும்பையை சேர்ந்த வெர்னோன் கொன்ஸ்லாவ்ஸ் மற்றும் அருண் ஃபெரைரா ஆகியோர் அக்டோபர் 26ம் தேதி முதல் சிறையில் உள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.வரவர ராவ் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் யேரவடா சிறையில் உள்ளனர். இவர்களின் பெயில்கள் புனே சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கௌதம் நவ்லகாவை பிப்ரவரி 18ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வன்முறை : கைது செய்யப்பட்ட அந்த ஐந்து நபர்கள் யார் ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Activist anand teltumbde was released on saturday evening

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X