Actor Sonu Sood honoured by UNDP : ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விருதான சஸ்டைனபள் டெவலெப்மெண்ட் கோல்ஸ் விருதினை பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து மற்றும் சிறப்பு விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும் வேலையிழந்த பலருக்கும் வேலைகள் கிடைக்கவும், கல்விக்காக போராடும் மாணவர்களுக்கும் உதவினார்.
மேலும் படிக்க : நடிகர் சோனு சூட் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு
இவரின் இந்த மனித நேய செயல்களை அறிந்த ஐக்கிய நாடுகள் சபை இவருக்கு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்றார் சோனு சூட். இது மிகவும் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். என்னுடைய சக குடிமக்களுக்கு என்னால் ஆன சிறிய உதவிகளை எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இன்றி நான் செய்தேன்.
ஆனால் இதற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்னை சிறப்பாக உணர வைக்கிறது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பினை தருவேன் என்று சோனு சூட் கூறியுள்ளார். இதற்கு முன்பு இத்தகைய விருதினை நடிகர் லியொனார்ட் டி கேப்ரியோ, நடிகை ஏஞ்சலினா ஜூலி, விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil