wheat procurement at all-time high : மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த வேலையிலும் கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. நெல்லின் கொள்முதலிலும் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஃபுட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா ( Food Corporation of India (FCI)) தரவுகளின் படி, தற்போதுள்ள ராபி சந்தைக் காலத்தில் மொத்தமாக 405 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, மே 29ம் தேதி வரை, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 390 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையைக் காட்டிலும் இது 4% அதிகம். மேலும் தற்போதைய கோதுமை கொள்முதல் முன்பு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 400 லட்சம் மெட்ரிக் டன்களை முதன்முறையாக கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் அதிகபட்ச கோதுமை கொள்முதல் பஞ்சாபில் (132 லட்சம் மெட்ரிக் டன்) செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 127 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், ஹரியானாவில் 84.93 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அதிக கொள்முதல் செய்யப்பட்ட மாநிலமாக ம.பி. இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
மூன்று வேளாண் சட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாபில் 127 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், ஹரியானாவில் 74 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டது.
2020-21 ஆண்டுகளுக்கான காரிஃப் சந்தை காலத்தில் நெல் கொள்முதல் புதிய உச்சத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது., மொத்தமாக 789 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டில் வெறும் 773 லட்சம் மெட்ரிக் டன் நெல்லாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தெலுங்கானா, ஒடிஷா, ஆந்திரா, உ.பி., சத்தீஸ்கர் மற்ரும் ஹரியானாவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
எஃப்.சி.ஐ படி, நடந்து வரும் 2021-22 ராபி சந்தைப்படுத்தல் பருவத்தில் சுமார் 19,036 கோதுமை கொள்முதல் மையங்கள் செயல்பட்டன. அதே நேரத்தில் நெல் கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை 2020-21 காலத்தில் 73,870 ஆக இருந்தது.
விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி உறுதி செய்தல் மற்றும் பொது விநியோக முறையின் கீழ் மலிவு விலையில் பலவீனமான மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வது என இரண்டு நோக்கங்களை நிறைவேற்ற மத்திய அரசு இந்த இரண்டு தானியங்களையும் கொள்முதல் செய்கிறது மத்திய அரசு.
தற்போது மத்திய அரசிடம் 1000 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் கையிருப்பு உள்ளது. கோதுமை (525.65 எல்எம்டி), அரிசி (304.85 எல்எம்டி), அரைக்காத நெல் (262.20 எல்எம்டி 176 எல்எம்டிக்கு சமமான அரிசி) உள்ளது. கடந்த மே மாதத்தில் இந்த கையிருப்பு 800 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil