After PM Narendra Modi’s latest address to the nation, netizens react with memes : கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டித்து நேற்று அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம் 80 கோடி மக்கள் நலமடைவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” – விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
ஆனாலும் மக்கள் முகக்கவசங்கள் அணிவது மற்றும் தனி மனித இடைவெளிகளை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடுமையாக கடைபிடிப்பதில்லை என்று கூறினார். இவரின் இந்த உரையை தொடர்ந்து நரேந்திர மோடி ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது. அவருடைய உரையில் இடம் பெற்றிருந்த கருத்துகளை வைத்து மீம்களை தெறிக்கவிட்டிருந்தனர் நெட்டிசன்கள்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil