Advertisment

தொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்.... சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்...

14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த மலையேற்றத்திற்கு செல்லலாம் - வனத்துறை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Agasthyakoodam peak, sabarimala issue,

Agasthyakoodam peak : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கிறது நெய்யாறு வனவிலங்கு சரணாலயம். அதன் அருகே, கடல்மட்டத்தில் இருந்து 1868 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது அகஸ்தியர் மலையில் அகஸ்திய கூடம்.  வருடாவருடம் இம்மலைக்கு சென்று பிரார்த்தனை நடத்துவது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்றே, இங்கும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

Advertisment

மேலும் படிக்க : ஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சென்றதில்லையா ?

Agasthyakoodam peak செல்லும் பெண்கள்

இந்நிலையில் கடந்த வருடம் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வந்த இரண்டு பெண்கள் அமைப்பு, இந்த அகஸ்திய கூடத்திற்கு பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதி வேண்டி கோரிக்கை மனுக்கள் வைக்கப்பட்டன.  மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, அனு சிவராமன் பெண்களின் வழிபாட்டிற்கு உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கினார்.

இந்த வருட மலையேற்றத்திற்காக வனத்துறையினர் டிக்கெட் புக்கிங்கை ஓப்பன் செய்த 2 மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

41 நாட்கள், அகஸ்தியகூடம் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 நபர்கள் மட்டுமே அகஸ்திய கூடத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 41 நாட்களுக்கு 4100 பேர் மட்டுமே செல்ல முடியும். மலையேற்றப் பாதை என்பதால், பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் என எதுவும் அங்கே அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பெண்களால் ஏறவே முடியாத மலைகள் என்றும் இது நாள் வரை சொல்லப்பட்டு வந்தது.

கனி பழங்குடி இனத்தவரின் வழிப்பாட்டு கூடம் தான் இந்த அகஸ்திய கூடம். அங்கு கோவில்களோ கட்டிடங்களோ இல்லை. அகஸ்திய முனிவரின் சிலை மட்டுமே உண்டு. ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே இந்த மலைக்கு சென்று, அந்த சிலையை வணங்கி வந்தனர்.

அதிரமலையை தாண்டி பெண்கள் செல்லக்கூடாது என்பதும், சென்றால் அது எங்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் என்றும் கனி ஆதிகுடிகள் கூறிவருகின்றனர். மேலும் அவர்களின் பூர்விகத்தில் இருந்து வந்த பெண்களும் கூட அகஸ்திய முனியின் சிலை அருகே செல்லக் கூடாது என்பதை வெகு நாட்களாக பின்பற்றி வருகின்றனர்.

வனத்துறையினர் இது பற்றி கூறுகையில், நல்ல மனநிலையும், உடல் நிலையும் கொண்டவர்கள் மட்டுமே இந்த மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 25.5 கி.மீ ட்ரெக்கிங்கை முடிக்க மூன்று நாட்கள் ஆகும் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த மலையேற்றத்திற்கு செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment