AgustaWestland case : காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் பாஜகவால் முன் வைக்கப்பட்டது. அப்போது, இடைத்தரகர் ஒருவர் மிஸஸ் காந்தி மற்றும் சன் ஆஃப் இத்தாலியன் லேடி என்று இருவரை குறிப்பிட்டது பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்த ஏ.கே. அந்தோணி இது குறித்து தற்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளார். அகஸ்டா வேஸ்ட்லாண்ட் விவகாரம் தொடர்பாக பேசிய போது “எந்த ஒரு சூழ்நிலையிலும் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ பாதுகாப்பு துறை சம்பந்தமாக போடப்பட்ட ஒப்பந்தங்களில் தலையிட்டது இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
AgustaWestland case - முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம்
அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு வைக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம்: ‘மிஸ்சஸ் காந்தி’ பெயரை குறிப்பிட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன்!
அகஸ்டா குறித்த குற்றச்சாட்டுகள் வரும் போது அதனை முறையாக விசாரணை செய்ய மத்திய புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டது கூட மத்திய அரசு அல்ல. நான் தான். அந்த விசாரணையைத் தொடர்ந்து 6 நிறுவனங்களை நாங்கள் ப்ளாக் லிஸ்டில் சேர்த்ததும் கூட எங்களின் ஆட்சி தான். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களை பிளாக் லிஸ்ட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இடைத்தரகர் க்றிஸ்டியனிடம் நடத்தபப்ட்ட விசாரணையின் போது, சோனியா காந்தி குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் கூறுவது என்று தன்னுடைய வழக்கறிஞரிடம் உதவி கேட்டார் கிறிஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்ததும் காங்கிரஸ் தரப்பு, பாஜகவினர் போல் சிறந்த கதை ஆசிரியர்களை பார்க்கவே முடியாது என்றும், ஓவர் டைம்மில் வேலை பார்க்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். பாஜகவினரோ “வெளியான தகவலகள் பெறும் அதிர்ச்சியை தருகிறது. குற்றவாளிகள் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருக்கின்றார்கள்” என்று தங்களின் பங்கிற்கு பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.